28.5 C
Chennai
Saturday, May 17, 2025
6688707d 4a0a 4728 ae86 fa1545c21854
மருத்துவ குறிப்பு

நொச்சி தாவரத்தின் மருத்துவ குணங்கள்

நொச்சி
புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

இலைகள்
உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

வேர்
சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

மலர்கள்
குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள்
நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
6688707d 4a0a 4728 ae86 fa1545c21854

Related posts

கற்ப மூலிகை மூக்கிரட்டையை கேள்விப்பட்டிருக்கீங்களா?உங்க உடல் எடையைக் குறைத்து, இளமைப்பொலிவைத் தரும் தெரியுமா?

nathan

உங்க உடலுக்கு வலிமை தரும் மசாஜ் தெரபி தெரியுமா

nathan

கர்ப்பமாக முயற்சிக்கும் முன் பெண்கள் இந்த சோதனைகளை கண்டிப்பாக செய்யணும்…

nathan

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

nathan

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

nathan

அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?

nathan

கல்லீரல் நோய்

nathan

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள் – தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க பாதம் அடிக்கடி சில்லுன்னு ஆகுதா? இந்த காரணங்கள் இருக்கலாம்!!

nathan