24.6 C
Chennai
Thursday, Dec 4, 2025
Thuvaiyal Inji thogayal ginger chutney SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

இஞ்சி – 100 கிராம்

உளுத்தம் பருப்பு – 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
துருவிய தேங்காய் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

Related posts

பூண்டை வறுத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

vellarikka in tamil – வெள்ளரிக்கா

nathan

பூசணி விதை எப்படி சாப்பிடுவது ? சாப்பிட்டா எடை, சர்க்கரை ரெண்டும் வேகமா குறையும்…

nathan

உயிருக்கே ஆபத்து! தப்பித்தவறி கூட அகத்தி கீரையை இப்படி சாப்பிடாதீங்க!…

nathan

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

nathan

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!! உடலுக்கு ஆரோக்கியம் தரும்

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan

mappillai samba rice benefits in tamil – மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்

nathan