29.8 C
Chennai
Thursday, Nov 14, 2024
2 aadimonth1 15
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆடி மாதத்தில் திருமணமான தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

நாம் ஒருவர் சொல்வதை கண்மூடித்தனமாக பின்தொடரும் தலைமுறையினர் அல்ல; நாம் கேள்வி கேட்கும் தலைமுறையினர். இந்து மதத்தில் பல பழக்கவழக்கங்கள் அவசியம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அதன் அவசியத்தை இன்னும் யாரும் உணர்ந்ததில்லை.

குறிப்பாக தென்னிந்தியாவில் இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்கள் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். அதேப் போல் திருமணமான தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பார்கள். இப்படி பிரித்து வைப்பதற்கான காரணம் தெரியாமல், இன்றும் பல திருமணமான தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.

இக்கட்டுரையில் இந்து மதத்தில் ஏன் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர்களை பிரித்து வைக்கிறார்கள் மற்றும் ஏன் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதில்லை என்பன போன்ற கேள்விகளுக்கான விடையைப் பார்ப்போம்.

தெய்வங்களை வணங்குவதற்கான மாதம்

ஆடி என்பது சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. இந்த மாதம் தெய்வங்களை வணங்குவதற்கான புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இம்மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் தான் பார்வதி தேவி விரதமிருந்து, தனது கணவர் சிவபெருமானை இணைந்தார். இதனாலேயே இந்த மாதத்தில் ஆடித்தபசு கொண்டாடப்படுகிறது.

ஏன் திருமணம் செய்யக்கூடாது?

ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான மாதமாக இருந்தாலும், இந்த மாதத்தில் எந்த ஒரு சுபகாரியங்களையும் செய்வதில்லை. ஏனெனில் இந்த மாதம் இறைவனை வழிபடுவதற்கான மாதமாக பார்க்கப்படுகின்றது. இதனால் இந்த மாதத்தில் இறைவனைத் தவிர வேறு எதிலும் சிந்தனை செல்லக்கூடாது என்பதாக திருமணம் உள்ளிட்ட பல சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை.

புதிதாக திருமணமான தம்பதிகளை ஏன் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கிறார்கள்?

இந்து மதத்தில் கண்மூடித்தனமாக இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் ஓர் பழக்கம் ஆடி மாதத்தில் தம்பதியர்களைப் பிரித்து வைப்பது. ஏன் இந்த மாதிரியான பழக்கம் மக்களிடைய வந்தது என்றால், ஆடி மாதத்தில் ஒரு பெண் கருத்தரித்தால், அந்த பெண் சித்திரை மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுப்பாள். சித்திரை என்பது கோடைக்காலம். கடுமையான வெயில் காலத்தில் ஒரு பெண் குழந்தையை பிரசவித்தால், பிரவித்த பெண்ணுக்கும், புதிதாக பிறந்த குழந்தைக்கும் மிகவும் வேதனையாக இருக்கும்.

மற்றொரு காரணம்

முந்தைய காலத்தில் மருத்துவமனைகள் மற்றும் நல்ல சிகிச்சைகள் கிடைப்பது என்பது அரிதாக இருந்தது. எனவே தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்காக, புதிதாக திருமணமான தம்பதியர்களை பிரிந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் தற்போதைய விஞ்ஞான முன்னேற்றங்கள், நவீன வசதிகள் மற்றும் மருத்துவமனைகளுடன், இம்மாதிரியான நடைமுறை பொருத்தமற்றது.

பணப் பிரச்சனை

ஆடி மாதம் உழவுத் தொழிலை தொடங்குவதற்கான காலமாக பார்க்கப்படுகின்றது. இக்காலத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்தால், அது அதிக பண செலவிற்கு வழிவகுக்கும். உழவுத் தொழில் தொடங்கும் காலத்தில் கையில் இருக்கும் பணத்தை திருமணத்திற்கு செலவிட்டால், பின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். இந்த காரணத்தினாலும் திருமணத்தை ஆடி மாதத்தில் செய்வதில்லை.

Related posts

P அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா?சுவாரஸ்யத் தகவல்…

nathan

பெண்களுக்கான சில ஆலோசனைகள்..! சீக்கிரமாக கர்ப்பமடைவது எப்படி?

nathan

நம் முன்னோர்கள் மட்டும் எப்படி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று தெரியுமா?

nathan

இந்த ராசி பெண்களிடம் உஷாரா இருங்க…! இந்த 7 ராசிக்காரங்கள காதலில் தெரியாம கூட நம்பிராதீங்க…

nathan

இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலில் இருந்து வெளிவர ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவார்களாம்!

nathan

கர்ப்ப காலத்தில் குடிக்கும் இந்த பானங்களால் பிரசவத்தின்போது பல சிக்கல்கள் ஏற்படுமாம்…!

nathan

தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

இதோ எளிய நிவாரணம்! இடுப்பு வலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!

nathan

வாட்ஸ் அப் மூலம் பெண்களை தொடரும் ஆபத்து

nathan