29.2 C
Chennai
Tuesday, May 20, 2025
08 1452258393 6 curryleaves
எடை குறைய

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க…

உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். இருப்பினும் இன்று வரை பலர் அதனை தூக்கி எறிந்து கொண்டு தான் உள்ளார்கள்

கறிவேப்பிலையைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்னவெனில் கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் என்பது தான். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள்.

ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம்.

செரிமானம்

சீராகும் கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் இருந்தால் தான், உணவுகள் செரிமானமாகாமல் அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து, தொப்பையை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் வந்தால், காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

உடல் சுத்தமாகும்

பொதுவாக கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிட்டால், உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்

கெட்ட கொலஸ்ட்ரால் கரையும்

பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வாருங்கள்.

ஆய்வுகள்

ஆய்வுகளிலும் கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைவது தெரிய வந்துள்ளது. அதுவும் அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறதாம்.

எப்படி எடுக்கலாம்?

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.curryleaves

Related posts

உங்களுக்கு தெரியுமா அன்னாசியை இப்படி சாப்பிடுங்கள்.. வயிற்றுச் சதை பாதியாய் போய்விடும்!!

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

nathan

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் | Reason For Weight Gain

nathan

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!

nathan

உங்க நீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்

nathan