29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
chicken kurma
ஆரோக்கிய உணவு

ஈஸியான… சிக்கன் குருமா –

பேச்சுலர்களே! நீங்கள் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிக்கன் குருமா செய்து சுவைத்ததுண்டா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சிக்கன் குருமாவை கொடுத்துள்ளது.

அந்த சிக்கன் குருமாவின் செய்முறையைப் படித்து, தவறாமல் செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Easy Chicken Kurma Recipe
தேவையான பொருட்கள்:

சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி – 3

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கற்வேப்பிலை – சிறிது
பூண்டு – 6 பற்கள்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5-7 நிமிடம் வதப்பி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி!!!

Related posts

சுவையான மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

nathan

உடல் எடையைக் குறைக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

30 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உடலுக்கு எமனாகும் பரோட்டா

nathan

தெரிஞ்சிக்கங்க…நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் இந்த செடியைப் பற்றி தெரியுமா?

nathan

தயிர்

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

நம்பமுடியாத உண்ணக்கூடிய புரதம்: முட்டை மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள்

nathan

கருப்பு திராட்சை சாறு அருந்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

nathan