மருத்துவ குறிப்பு

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

வரித்தழும்புகள் அழகையே கெடுக்க கூடியவை; பெண்களின் உடலில் பல நிலைகளில் இந்த வரித்தழும்புகள் ஏற்படுகின்றன. இந்த வரித்தழும்புகள் ஏற்படும் முக்கிய நிலைகள் பிரசவத்திற்கு பின் மற்றும் தாய்ப்பால் அளித்தலுக்கு பின்னானவை ஆகும். இந்த இரண்டு நிலைகளுக்கு பின்னும் பெண்கள் தனக்காக வாழ்வதை நிறுத்தி தனது குடும்பம், குழந்தை என்று வாழ தொடங்கி விடுகின்றனர்.

இவ்வாறு பெண்கள் தங்கள் வாழ்க்கையை வாழாமல் விடுவதற்கு மற்றொரு காரணம், தங்கள் மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கை குறைந்து விடுவது தான். பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்திய மருந்துகள் மற்றும் மனைவியின் வரித்தழும்புகள் பற்றி கணவன்மார்கள் அறிய வேண்டியவை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

வரித்தழும்புகள்!

பெண்கள் ஏதேனும் இறுக்கமான உடைகளை அணியும் பொழுது ஏற்படும் லேசான தழும்புகள், அவர்கள் பிரசவம் என்னும் முக்கிய நிலையை அடைந்து, குழந்தையை பிரசவிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட பின் அதிகமான மற்றும் அழுத்தமான வரித்தழும்புகளாக மாறி விடுகின்றன; பெண்களின் உடலில் அழுத்தமான வரித்தழும்புகள் பதிந்து விடுகின்றன.

என்ன தான் தீர்வு?

தாய்ப்பால் அளிக்கும் பொழுதும் குழந்தையின் கடி, இறுக்கமான உள்ளாடைகளால் மார்பகத்திலும், பிரசவ அறுவை சிகிச்சை காரணமாக வயிறு, தொடை, பிறப்புறுப்பு பகுதிகளிலும் வரித்தழும்புகள் ஏற்படுகின்றன. இந்த வரித்தழும்புகளை போக்குவது எப்படி என்று பல பெண்கள் குழம்பி தவிப்பது உண்டு. அத்தகைய குழப்பத்தில் வாடும் பெண்களுக்காக இங்கு வரித்தழும்புகளை போக்கும் சில தீர்வுகளை அளிக்கிறோம்.

கலவை மசாஜ்!

வரித்தழும்புகளை விரைவில் போக்க பெண்கள் அலோவ் வேரா ஜெல் என்று கூறப்படும் கற்றாழை ஜெல், கோதுமை ஜெர்ம் ஜெல், ஆலிவ் எண்ணெய் போன்ற பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்; இந்த மூன்று பொருட்களையும் சம அளவில் கலந்து ஒன்றாக கலவையாக தயாரித்து கொள்ளுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தயாரித்த இந்த கலவையை வரித்தழும்புகள் இருக்கும் உடல் பகுதியில் மசாஜ் செய்து வந்தால், எளிதில் வரித்தழும்புகளை போக்கி விடலாம். எண்ணெய்ப்பசையுள்ள சருமம் உள்ள பெண்கள் இந்த கிரீமை க்ளே சேர்த்து பயன்படுத்தவும்.

குளவி மெழுகு!

குளவி மெழுகு, ஒரு தேக்கரண்டி விட்டமின் இ எண்ணெய், பாதி அளவு கோகோ பட்டர் அதாவது கோகோ வெண்ணெய் சேர்த்து, (இவற்றுடன் கோதுமை ஜெர்ம் எண்ணெய், கெர்னெல் எண்ணெய் கூட சேர்த்துக் கொள்ளலாம்) குளவி மெழுகு நன்கு உருகும் வரை சூசுடுபடுத்தவும். சூடு படுத்திய இந்த கலவையை சூடு தணிந்த பின் ஒரு டப்பாவில் போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தினசரி வரித்தழும்புகள் உள்ள இடத்தின் மீது தடவி வரலாம்.

 

எண்ணெய்களின் கலவை!

கற்றாழை ஜெல் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய், விட்டமின் ஏ மாத்திரை கேப்ஸுல்கள், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கீரிம் போன்று தயாரித்துக் கொண்டு, இதனை உடம்பில் வரித்தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் விரைவில் வரித்தழும்புகள் உடலில் இருந்து மாயமாகி மறைந்து விடும்.

வரித்தழும்புகள் உடலில் இருந்து நீங்கி விட்டாலே தனது அழகு கூடியதாக பெண்கள் உணர்வார்கள்; அதை பற்றி அவர்கள் கொண்ட கவலைகள் குறைய இந்த மருந்துகள் உதவும்.

நம்பிக்கையின் காரணி!

பெண்கள் நம்பிக்கையுடன் செயல்பட அவர்களின் மன தைரியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் முகத்தோற்றமும், அவர்கள் கம்பர்ட்டபிள் என்று சொல்லக்கூடிய வசதியான நிலையில் இருக்க வேண்டியது அவசியம். ஒரு பெண் இந்த இரண்டையும் கொண்டு இருந்தால், அப்பெண்மணியால் எதையும் சாதிக்க முடியும்.

கணவர்களின் கடமை!

மேலும் பெண்மணி தங்களது குடும்பத்திற்காக எவ்வளவு உழைக்கிறாளோ, அந்த அளவுக்கு குடும்பத்தினர் தங்கள் ஆதரவை பெண்களுக்கு வழங்க வேண்டும். மனைவியை கல்யாணமான புதிதில் எப்படி பத்திரமாக, பாசத்தோடு பார்த்துக் கொண்டீர்களோ, அதே மனைவியை ஒரு குழந்தையை தத்து எடுத்த பின்னரும் அதே வகையிலேயே அல்லது அதற்கும் மேலாக காதலுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

காதல் செய்யுங்கள்!

ஆண்கள் அழகு இல்லை என்று ஒதுக்கினால் பல ஆண்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்து பார்த்தால், பெண்களை அப்படி அழகு என்னும் காரணம் சொல்லி ஒதுக்க தோணாது! மனைவியின் அழகு குறைந்தாலும் தனது பாசத்தை குறைக்காதவரே ஒரு நல்ல கணவராக இருக்க முடியும். நீங்கள் நல்ல கணவர் என்பதை உங்கள் மனைவி எப்படி இருந்தாலும் அவளை காதல் செய்வதை நிறுத்தாமல், உங்கள் அன்பை அவளுக்கு காட்டி புரிய வையுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button