கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்
>குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில் பெரியவர்கள் இல்லை. பிரசவம் எப்படி இருக்கும், குழந்தையை எப்படித் தனியாகப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள் இளம்பெண்கள்.அவர்களுக்கு உதவி செய்வதுதான் கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள். கர்ப்ப காலங்களில் என்ன செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, பிரசவ வலியைக் கையாள்வது எப்படி, குழந்தை பிறந்தவுடன் எப்படிக் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது, பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் இந்த வகுப்பில் சொல்லித்தருகிறார்கள்.குழந்தைப்பேற்றுக்குத் திட்டமிடும் பெண்கள், கருவுற்ற பெண்கள் 4-7 மாதத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் இதில் சேரலாம். கர்ப்ப காலம்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். கர்ப்ப காலத்தில், தாய்க்கு இருக்கும் உணர்வுகளே குழந்தையின் குணமாக உருவெடுக்க இதுவும் ஒரு காரணம்.அதுபோல, ஆரோக்கியமும் தாயிடமிருந்துதான் குழந்தைக்குக் கடத்தப்படும். குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் பெண்களுக்கு, வகுப்பில் அதற்கான கவுன்சலிங் தரப்படும்.

கர்ப்பிணிகளுக்கான எளிய யோகாசனங்கள், பிராணாயாமப் பயிற்சிகள், நறுமணம் சூழ்ந்த சூழலை உருவாக்குதல், கற்பனைத் திறனின் மூலம் ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவாக்குதல், மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், இசையை குழந்தைக்கு அறிமுகப்படுத்துதல், அறுசுவையையும் சுவைத்தல் போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ளலாம்.

இவை, பிரசவ வலியைக் குறைத்து, சுகப் பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகள். கர்ப்ப காலங்களில் எப்படி நிற்பது, நடப்பது, உட்காருவது, உறங்கும் நிலை, உடலுழைப்பு தரும் வேலைகளைச் செய்வது எப்படி என்பன போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரின் உடல்நிலை பொறுத்து, அவர்களுக்கான டயட் லிஸ்ட் தரப்படும். அதற்கேற்ப, உணவுகளை உட்கொண்டுவந்தால், குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

Related posts

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

nathan

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேனீர்

nathan

புற்றுநோயும் கூந்தலும்

nathan

பயணமும் சட்டமும் பாதுகாப்பை தருகிறதா?

nathan

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! காதுக்குள் இருக்கும் பருக்களால் அவஸ்தையா?

nathan

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம்

nathan

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட் -தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாம்…

nathan