23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pre 153968
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?தெரிந்துகொள்ளுங்கள் !

தாய்ப்பால் அளித்தல் என்பது மிக முக்கியமான விஷயம்; பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரையிலாவது தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு கால்சியம் அதிகம் தேவை; அதே போல் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு நீர்ச்சத்தும் அதிகம் தேவை.

இந்த பதிப்பில் பெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

கவனம் அவசியம்!

பெண்கள் குழந்தைகளை பெற்று எடுத்த பின் அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையை எப்படி பக்குவத்துடன் பதமாக பார்த்து பார்த்து கவனித்து வந்த பெண்கள், குழந்தைகள் பிறந்த பின் கர்ப்ப காலத்தில் இருந்ததை விட பல மடங்கு ஜாக்கிரதையாக அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பிறந்த பின் அவர்களுக்கு சரியான நேரத்தில் தாய்ப்பால் அளித்தல் மற்றும் சரியான கால இடைவெளியை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கையில் மேற்கொள்ளுதல் போன்றவற்றில் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச காலம்!

குழந்தையை பெற்று எடுத்த தாய்மார்கள் குழந்தைகள் பிறந்த நிமிடம் முதல் ஆறு மாதம் வரை அவர்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்மார்கள் இந்த ஆறு மாத காலத்திலும் குழந்தைகளுக்கு வேறு எந்த ஒரு திரவ உணவினையும் வழங்காமல், குழந்தை செல்வங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்து வருவது சிறந்தது.

குறைந்த பட்சம் தாய்மார்கள் ஆறு மாதம் வரை கட்டாயமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது அவசியம்.

முடிந்த வரை!

தாய்ப்பால் என்பது தான் குழந்தைகளுக்கு கிடைக்கும் முதல் மற்றும் முக்கிய உணவு; இந்த உணவை தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஆறு மாதத்திற்கும் மேலாக கொடுக்க முடிந்தால், அதாவது தாய்ப்பால் அளிக்கும் பெண்களின் உடலில் ஆறு மாதத்திற்கும் மேலாக தாய்ப்பால் சுரப்பு நடைபெற்றால், அந்நிலையில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு எது வரை தாய்ப்பால் அளிக்க முடிகிறதோ அது வரை அளிக்க வேண்டும் மற்றும் அவ்வாறு அளிப்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

தாய்மார்களின் உடலில்..!

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடலில் இருந்து பால் குழந்தைக்கு செல்வதால் பெண்களின் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இந்த நீரிழப்பை சரிநிலை செய்ய பெண்கள் 2.5 முதல் 3.1 லிட்டர் தண்ணீரை பருக வேண்டியது அவசியம். தாய்ப்பால் அளிக்கும் பெண்களின் உடலில் இருந்து குழந்தைகளுக்கு சென்று அடையும் பாலின் அளவு 9 கப்கள் முதல் 13 கப்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

என்ன செய்ய வேண்டும்.?

இவ்வாறு தாய்மார்களின் உடலில் இருந்து இத்தனை அளவு நீர்ச்சத்து பாலாக மாற்றப்படுவதால், பெண்களின் உடலில் நீர்ச்சத்து குறைதல் மற்றும் கால்சியம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது; ஆகையால் பெண்கள் அதிகம் நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீர்ச்சத்து உள்ள உணவுடன் கால்சியம் கூடிய நீர்ச்சத்தும் நிறைந்த உணவாக இருந்தால் மிக மிக நல்லது.

அப்படி ஒரு உணவு உள்ளது பெண்களே! அது தான் பால். தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் பாலூட்டும் பொழுது பால் குடித்துக் கொண்டே பால் கொடுத்தால் அது அதிக நன்மையை பயக்கும்.

பால் உதவுகிறதா?

சாதாரண நீர்ச்சத்து உள்ள உணவினை விட பெண்கள் கால்சியமும் நிறைந்த நீர்ச்சத்து உணவான பாலை பருகி வருவது தாய்ப்பாலூட்டும் பெண்களின் உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க செய்வதோடு, கால்சியம் சத்தையும் அதிகரிக்க செய்யும். பெண்கள் சரியான அளவு மற்றும் போதுமான அளவு பாலை பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பும் மேம்படும்.

தாய்ப்பால் சுரப்பு மேம்படுவதோடு, அதில் இருக்கும் கால்சியத்தின் அளவும் அதிகரிக்கும்; இது குழந்தைக்கு மிகவும் நல்லதே!

திட உணவும் தேவை!

தாய்ப்பால் அளிக்கும் பெண்களின் உடலுக்கு திரவம் அவசியம் அதாவது நீர்ச்சத்து அதிகம் தேவை என்று கூறியதால், பெண்கள் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு இராமல், உடலின் பிற செயல்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் தேவையான திட உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெண்கள் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் வகையிலான திட உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளல் மிகவும் அவசியம்.

Related posts

அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan

உங்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியாதா?

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…மொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ….கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க!

nathan

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

nathan

பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள்!

nathan

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிகள்

nathan