​பொதுவானவை

இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

VEDWBE0

தேவையான பொருட்கள்:
இளம் இஞ்சி – 25 கிராம்,
பிஞ்சு பச்சை மிளகாய் – 10,
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
அச்சு வெல்லம் – ஒன்று,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
* இஞ்சியை தோல் சீவி நறுக்கவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி ஆற வைக்கவும்.
* ஆற வைத்த பச்சை மிளகாய், இஞ்சியுடன், புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
* மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.VEDWBE0

Related posts

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

nathan

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

இஞ்சி தயிர் பச்சடி

nathan

பெண் குழந்தைகளுக்கு முதல் நண்பன்… அப்பா

nathan