31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு

நவராத்திரிக்கு ஒவ்வொரு நாள் பூஜைக்கும் பிரசாதம் கொடுக்க வேண்டும். இன்றைய பூஜையில் வேர்க்கடலை வெல்ல லட்டு செய்து வைத்து அசத்துங்கள்.

நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு
தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு கப்
பொடித்த வெல்லம் – தலா ஒரு கப்.
பாதாம் – தேவைக்கு
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

* பாதாமை துருவிக்கொள்ளவும்.

* தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

* இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து ஒரு தட்டில் கொட்டவும்.

* அரைத்த மாவை லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.

* சுவையான வேர்க்கடலை வெல்ல லட்டு ரெடி.

Related posts

கோதுமை அல்வா

nathan

சுவையான பால்கோவா…!

nathan

இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி

nathan

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan

விளாம்பழ அல்வா

nathan

தேங்காய் பர்பி

nathan

பொட்டுக்கடலை லட்டு

nathan

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan