29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Restrictions on Wedding Programs in Karnatak
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க ராசிப்படி நீங்க எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா அதிர்ஷ்டம் உங்கள தேடிவரும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

திருமணம் என்பது அனைவரின் வாழ்கையிலும் நடக்கும் ஒரு அற்புதமான விஷயம். வாழ்க்கையை மாற்றும் தருணம். ஒரு உறவில் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் அழகான விஷயம். ஆனால், தவறான நபருடன் ஏற்படும் திருமண உறவானது தற்கொலைக்கு சமமானது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே எந்த ஆண்டில் தனக்கு திருமணம் நடக்கும்?, திருமணம் செய்ய சரியான வயது என்ன? தங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள், எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? என்று பல கேள்விகள் அவர்கள் மனதில் இருக்கும்.

ஜோதிடத்தின்படி, உங்களின் திருமணம் குறித்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. குறிப்பாக எந்த வயதில் திருமணம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும் என்பதையும் மற்றும் உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதையும் சரியாக கணித்து சொல்லும். இக்கட்டுரையில், உங்கள் ராசிப்படி எந்த வயதில் திருமணம் செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் விடாமுயற்சி கொண்டவர்கள் அதனால் வாழ்க்கையில் அனைத்தையும் விரைவாக செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் அவர்கள் திருமணத்தையும் விரைவில் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் இவர்கள் 25 அல்லது 26 வயதில் திருமணம் செய்து கொள்வது அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

இவர்களுக்கு ரொமான்ஸில் அதிக ஆர்வம் இருக்கும், ஆனால் அதற்காக இவர்கள் அவசரப்படமாட்டார்கள். இவர்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். 20 வயதில் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு இவர்கள் விரும்பும் காதல் வாழ்க்கையை கொடுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் காதலில் இருப்பதை விரும்புவார்கள் ஆனால் காதலில் அவர்களின் தேவை என்னவென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. நன்கு முதிர்ச்சியடைந்த பிறகு திருமணம் செய்வதே இவர்களுக்கு நல்லது. 28 அல்லது 30 வயதில் திருமணம் செய்வது இவர்களின் காதல் வாழ்க்கைக்கு நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் குடும்பத்தை சார்ந்திருப்பவர்கள், நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதியான உறவை நீங்கள் தேடுகிறீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் துணை யார் என்று தேர்ந்தேடுப்பதில் மிகவும் தேடல் உடையவர். இவர்கள் அதைப் பற்றி உறுதியாக இருக்கும்போது மட்டுமே இவர்கள் உறுதிப்பாட்டைச் செய்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் 25 வயதில் திருமண உறவில் இணைவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் முழுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். உறவாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி இரண்டிலும் எப்படி சமநிலையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் அறிவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண வயது 25-27 ஆகும்.

துலாம்

இவர்கள் பொறுமையாகவும், எளிமையாகவும், விஷயங்களைக் கையாளுவதில் சிறந்தவர்களாக உள்ளனர். திருமணத்தைப் பொறுத்தவரை இவர்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது இருபதுகளின் தொடக்கமாகும் இல்லையெனில் 30 வயதில் திருமணம் செய்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

இவர்கள் மிகவும் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் மற்றும் இவர்கள்கள் பாதுகாப்பின்மை மற்றும் நம்பிக்கை பிரச்சினைகள் காரணமாக, சில நேரங்களில் நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் 24-26 வயதில் திருமணம் செய்து கொள்வது அழகான காதல் வாழ்க்கையை வழங்கும்.

தனுசு

நீங்கள் சுதந்திரத்திற்காக ஏங்குகிறீர்கள், அர்ப்பணிப்பு சிக்கல்களைக் கொண்டிருக்கிறீர்கள், இதன் காரணமாக எந்த நேரத்திலும் எந்த உறவிலும் பொறுப்புகளிலும் நீங்கள் பிணைக்கப்பட விரும்பவில்லை. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு அற்புதமான காதல் வாழ்க்கையை வழங்கும்.

மகரம்

வேலையையும் வீட்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது இவர்களுக்குத் தெரியும், எனவே உறுதிப்பாட்டின் யோசனை உங்களைப் பயமுறுத்தாது. எந்த வயதிலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அது இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தது. இவர்கள் 20-25 க்கு இடையில் திருமணம் செய்து கொள்ளலாம்.

கும்பம்

இவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தேடுப்பதில் இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் தாமதமாக திருமணம் செய்வதுதான் இவர்களுக்கு நல்லது. 30 வயதிற்கு மேல் இவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.

மீனம்

தங்கள் வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அதிர்ஷ்டமான வயது 26 ஆகும்.

Related posts

இவ்ளோ இருக்கா மணத்தக்காளி கீரைல .?

nathan

எல்லா ராசிக்காரரும் தங்கள் கவலைகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியுமா?

nathan

கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்!…

sangika

பெண்கள் அறிந்து கொள்ள..பெண்களின் முன்னழகை பாதிக்கும் செயல்கள்….

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…தந்தை ஆகப்போகும் ஆண்கள் இதை எல்லாம் கட்டாயம் செய்யனும்!

nathan

100 கலோரி எரிக்க

nathan

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவை

nathan

பெண் குழந்தை இருந்தா? நீங்க இதெல்லாம் செஞ்சே ஆகணும்!

nathan