ஆரோக்கியம் குறிப்புகள்

தயவு செய்து இதை படிங்க. மாத விடாய் வலி ( Period pain ) நீங்க இனி கவலை வேண்டாம்

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு வரப்பிரசாதமாகும். இந்த தாய்மை பேற்றை ஒரு பெண் அடைய ஒவ்வொரு மாதமும்

அப்பெண்ணின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி, அது கருவடையாத பட்சத்தில் மாதமொரு முறை வெளியேறுவதை மாதவிடாய் என்கின்றனர். இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும். இதற்கான காரணம் மற்றும் இதை போக்குவதற்கான வீட்டு மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம்.
tytj
மாத விடாய் வலி காரணங்கள் :
இந்த பிரச்சனைக்கு இது தான் காரணம் என எந்த மருத்துவராலும் கூற முடியவில்லை என்றாலும் ஹார்மோன்களின் அதீத உற்பத்தி, 20 வயதிற்கு கீழாக இருக்கும் பெண்களின் உடல் தன்மை, கர்ப்பப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம் :

வெந்தயம் :
நாம் உண்ணும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயத்திற்கு பல்வேறு உடற்குறைகளை போக்கும் ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக வயிறு சம்பந்தமான குறைபாடுகளை நீக்க வல்லது. மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெந்தயத்தை சிறிது முழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி கட்டுப்படும்.

புதினாகீரை :
கீரை வகைகளில் உடலுக்கு தேவையான பல அவசிய சத்துக்களை கொண்டது புதினா கீரை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இந்த புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும்.
sddf
ஏலக்காய் :
பலவகையான உடல் பாதிப்புகளுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்படுத்தபடுகிறது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.

இஞ்சி:
இஞ்சி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் அமிலத்தன்மை மிக்க ஒரு உணவு பொருளாகும். மாதவிடாய் வலி தீர இந்த இஞ்சியை சிறிது எடுத்து நீரில் போட்டு காய்ச்சி, அதை வலி மிகுந்த நேரங்களில் அவ்வப்போது சிறிது பருகி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதை அதிகம் பருக கூடாது.

விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெய் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை தர வல்லது. இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து கொண்டு தொப்புள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வர சூதக வலி எனப்படும் மாதவிடாய் வலி குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button