ஆரோக்கிய உணவு

தூதுவளையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

மூலிகை தன்மை கொண்ட தூதுவளைக் கீரையில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

தூதுவளைக் கீரை மட்டுமின்றி அதன் இலைகள், தண்டு, காய், இதன் பூக்கள் வரை எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டவை ஆகும்.

இந்த கீரையில் புரதம், கொழுப்பு, தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது எளிதாக எல்லா இடங்களிலும் பரந்து வளரும் தன்மை கொண்டது.

தூதுவளையின் நன்மைகள்

 

ஆஸ்துமா
ஆஸ்துமா நோயை குணமடைய செய்யும் வல்லமை தூதுவளைக்கு உண்டு. இதன் இலையை பறித்து சுத்தம் செய்து, அதன் சாறை பிழிந்து தேன் கலந்து ஒரு மண்டலத்துக்கு எடுத்து வந்தால் ஆஸ்துமா குணமடையும். ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா என்னும் நோய் வராமல் தடுக்க தூதுவளையை அவ்வபோது உணவில் சேர்த்து வரவேண்டும்.

 

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் பாதிப்பு வராமல் காப்பதிலும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் தூதுவளை உதவுகிறது. இதற்காக வாரத்திக்கு மூன்று நாட்கள் தூதுவளையை உணவில் சேர்த்து வர வேண்டும் அல்லது இதன் சாறை குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் இந்த இனிப்பான பழங்களை சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ

புற்றுநோய்
தொண்டைப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஆகியவற்றிற்கு தூதுவளை சிறந்த மருந்து என மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. உணவில் அடிக்கடி தூதுவளையை சேர்த்து வந்தால் தொண்டை புற்றுநோய், கருப்பை மற்றும் வாய்புற்றுநோய் வராமல் தடுக்கும். அதிகம் மதுகுடிப்பவர்களும், புகைப்பிடிப்பவர்களும் அதன் பாதிப்புகளை வராமல் தற்காத்துகொள்ள தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவரவேண்டும்.

 

பித்தம்
உடலில் ஏற்படும் பித்த அதிகரிப்பை சரி செய்து அதை சமப்படுத்துவதில் தூதுவளை சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி, பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும்.

பித்தநீர் அதிகரிப்பால் உடலில், கண்களில் நீர் சுரத்தல் என்னும் நோய் உண்டாகும். இதற்கு சிறந்த மருந்தாக தூதுவளை விளங்குகிறது. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருப்பதால், உடலில் எலும்புகள் மற்றும் பற்கள் பலமாக இருக்கும்.

வாயு தொல்லையால் பெரும் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க போதும்

ரத்த சோகை
உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்கு உண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் குறையும் பொது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர, தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

 

ஜலதோஷம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து, ஒரு மண்டலம் சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் இருமல், இரைப்பு முதலியவை நீங்கும், உடல் வலிமை பெறும்.

கரும்பு சாறு குடித்தால் இத்தனை நோய்களை விரட்டியடிக்க முடியுமே!

ஆண்மை குறைபாடு
குறைபாடு நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு ஆண்மை குறைபாடால் அவதிப்படுபவர்கள், தூதுவளைக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

அகத்தி கீரையின் அற்புத பயன்கள்

காய்ச்சல்
ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு, 200 மில்லியாக சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர், அதனை வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை என இந்த கசாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? வீட்டில் மருந்து இருக்கும்போது கவலை ஏன்?

ஞாபக சக்தி
வயது கூடிக்கொண்டே செல்லும் காலத்தில் பலருக்கும் ஞாபக திறன் குறைவது இயல்பான ஒன்றாகும். அனைத்து வயதினரும் தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

 

இதர பயன்கள்
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும். தூதுவளைக் காயை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் செய்தோ ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
தூதுவளைக் கீரை, வேர், காய் இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
வயிறு மந்தம் வயிற்று கோளாறுகள் இருப்பவர்கள் வாயுப்பிரச்சனையால் அவதிபடுபவர்கள், தினமும் காலை அரை டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தூதுவளைப்பொடி கலந்து குடித்து வந்தால் வயிறு பிரச்சனை குணமாகும்.
கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் தூதுவளை பூக்களை தனியாக பிரித்து நிழலில் உலர்த்தி பொடித்துவைத்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களின் தாக்கம் குறையும்.
மேற்கண்ட முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button