36.6 C
Chennai
Friday, May 31, 2024
kathrikaipulikuzhamburecipe
சமையல் குறிப்புகள்

சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு

மதிய வேளையில் எப்போதும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள், புளிக்குழம்பு செய்து சாப்பிட நினைப்பார்கள். ஆனால் அப்படி செய்யும் புளிக்குழம்போ நல்ல சுவையில் இல்லாமல், ஒன்று புளி அதிகமாகும் அல்லது காரம் அதிகமாகும். மேலும் புளிக்குழம்பு என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது கத்திரிக்காய் புளிக்குழம்பு தான்.

ஏனெனில் கத்திரிக்காய் கொண்டு புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். இங்கு கத்திரிக்காய் புளிக்குழம்பை சரியான பக்குவத்தில் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

Kathrikai Puli Kuzhambu Recipe
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 8-10 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5 பற்கள்
துருவிய தேங்காய் – 1/4 கப்
புளி – 1 சிறு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வடகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் கத்திரிக்காயை சேர்த்து, கத்திரிக்காய் சுருங்கும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், புளிச்சாற்றினை ஊற்றி, கத்திரிக்காய் மென்மையாக வெந்ததும், குழம்பை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, குழம்புடன் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, குழம்பு சற்று கெட்டியாகி, எண்ணெய் பிரியும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெடி!!!

Related posts

மாலை வேளையில் முட்டை கொத்து பாஸ்தா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோதுமை மாவு கருப்பட்டி தோசை செய்வது எப்படி?

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

nathan

சுவையான தக்காளி தொக்கு

nathan

உருளைக்கிழங்கு மசால் தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி?….

sangika

குடைமிளகாய் கறி

nathan

காலை உணவாக சாக்லேட் சாண்ட்விச்

nathan

அசைவ உணவுகள் சாப்பிடுபவரா? இதோ சில டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! மைசூர் மசாலா தோசை செய்ய ஈசியான வழி !!ட்ரை பண்ணி பாருங்க !!

nathan