26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
download 3
சிற்றுண்டி வகைகள்

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

இன்றைய குழந்தைகளுக்கு நூடுல்ஸ், மக்ரோனி போன்றவை தான் விருப்பமான உணவுப் பொருளாக உள்ளது. உங்கள் குழந்தை மாலை வேளையில் பசிக்கிறது என்று சொல்லும் போது, அவர்களுக்கு பிடித்தவாறும் சற்று வித்தியாசமான சுவையிலும் ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால் சீஸ் மக்ரோனி செய்து கொடுங்கள். இது கால்சியம் மற்றும் புரோட்டீன் நிறைந்த ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.

இங்கு அந்த சீஸ் மக்ரோனியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக இது பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மக்ரோனி – 1 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ச்சிய பால் – 1/2 கப்
சீஸ் – 1/2 கப் (துருவியது)
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி/ ஒரேகானோ – 1/2 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் உப்பு மற்றும் மக்ரோனி சேர்த்து, குறைவான தீயில் மக்ரோனியை வேக வைக்க வேண்டும்.

மக்ரோனி வெந்ததும், அடுப்பை அணைத்து, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

பின் அந்த மக்ரோனியில் வெண்ணெய், பால், சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் சிறிது உப்பு, சர்க்கரை மற்றும் ஒரேகானோ சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சீஸ் மக்ரோனி ரெடி!!!
download 3

Related posts

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

சுவையான மசாலா பொரி

nathan

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

பூசணி உலர் திராட்சை ரெய்தா

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan