ஆஸ்துமா,நாள்பட்ட நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமல் என அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த சாறை தயாரித்து உண்டால் போதும்.
தேவையான பொருட்கள் :
வெற்றிலை – 1 ,
இஞ்சி துண்டு- சிறிதளவு,
தேன்- சிறிதளவு.
சாறு தயாரிக்கும் முறை:
வெற்றிலையை காம்பை எடுத்து விட்டு சிறிது, சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெற்றிலையை இஞ்சியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் நன்கு கொதிக்க வைத்த நீர் ஒரு மேஜைக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை மிக்சியில் இட்டு அரைக்க வேண்டும். அரைத்த சாறை எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
வடிகட்டிய சாறுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இச்சாற்றினை தொடர்ந்து 48 நாட்கள் 10 மிலி குடித்து வர எப்படி பட்ட சளியையும் குணப்படுத்தக் கூடியது.
மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நுரையீரல் கோளாறுகள் அனைத்தும் தீர்ந்து ஆரோக்கியமான உடலை பெறலாம்.