28.9 C
Chennai
Monday, May 20, 2024
best breakfast
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள கலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம்.காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும்.

 

நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும். ​​
1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது
2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கப் அல்லது
3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் என்று எளிமையாக இருந்தால் போதும்.

பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை (Metabolism) மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்.

ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை, தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். ஏனெனில் இதில் விட்டமின் C தாராளமாக இருக்கிறது. இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் விட்டமின் சி போதுமான கிடைக்கும். மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும் மூளையை துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

மேலும் அன்னாசி மற்றும் பப்பாளிப் பழத்துண்டுகளும் சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது. அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம். சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

ஆகவே, காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.best breakfast

Related posts

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா? மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாம் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

nathan

வேப்ப எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ பயன்களா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சாப்பிட்ட உடன் இவற்றை செய்யாதீர்கள்!

sangika

தெரிந்துகொள்வோமா? பெண்களின் வயதும்.. குழந்தை பாக்கியமும்…

nathan

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan

பெண்களே…. ஒரு மாதத்தில் 2 முறை மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் இதோ..!

nathan

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்கள் தயக்கத்தை தவிர்க்கும் வழிகள்

nathan