28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
ci 1521031843
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…தெரிஞ்சிக்கங்க…

நம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் ராணி மாதிரி, இரவில் யாசகன் மாதிரி சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள்.

இந்த கருத்தை ஆராய்ந்து பார்த்தால் நிறைய நன்மைகள் பொதிந்துள்ளன. ஆமாங்க காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதும் கூட . அது மட்டுமா இந்த காலை உணவை கொண்டு நம் உடல் எடையை கூட குறைக்க முடியும்.

17 ஆண்டுகள் ஆராய்ச்சி

17 ஆண்டுகள் ஆராய்ச்சி படி பார்த்தால் கிட்டத்தட்ட 50,000 மக்கள் தங்கள் காலை உணவின் மூலம் உடல் எடையை குறைத்து உள்ளனர். நீங்கள் விரதம் இருந்து சாப்பிடும் உணவின் மூலம் உங்கள் மெட்டா பாலிசம் தூண்டப்பட்டு உடலில் உள்ள அதிக கலோரிகள் முழுவதும் இரவில் எரிக்கப்படுகிறது என்று அபே ஷார்ப், ஆர். டி கூறுகிறார். மேலும் இந்த முறை அதிகமான நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் சுரப்பிற்கு உதவுகிறது.

தூக்கமின்மை

சில பெண்களுக்கு காலையில் வயிறு பசிப்பதில்லை அப்படி இல்லையென்றால் காலை உணவிற்கு பிறகு குமட்டல் ஏற்படும். இந்த மாதிரியான பிரச்சினைகள் அவர்கள் இரவில் சரியாக தூங்கவில்லை என்றாலும், நேரம் நேரத்திற்கு சாப்பிடுவதை பொருத்தும், தினமும் குடிக்கும் தண்ணீரை பொருத்தும், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்தும் உள்ளது என்று பிரிஜிட் ஜெய்ட்லின், ஆர். டி கூறுகிறார். மேலும் சில நபர்கள் இரவில் அதிகமாக உணவை உட்கொள்வதால் சீரணமாகுவது கஷ்டப்பாக இருப்பதோடு வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.

காலை உணவு

சிலர் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை சாப்பிடுவதே இல்லை. இதுவும் முற்றிலும் தவறான செயல். நீங்கள் காலையில் எடுத்துக்கும் சில உணவுகளே போதும் உங்கள் உடல் எடையை குறைக்க. அப்படிப்பட்ட உணவுப் பழக்கத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

நீர்ச்சத்து

நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும் உங்கள் பசி சிக்னல் தூண்டப்படும். இந்த ஒரு கிளாஸ் தண்ணீர் மூலம் நீங்கள் சாப்பிடப் போவதை உங்கள் உடம்புக்கு தெரியப்படுத்தலாம் என்று ஜெய்ட்லின் கூறுகிறார்.

கொஞ்சமாக ஆரம்பியுங்கள்

முதலில் எடுத்த உடனே சாதம் சாப்பிடாமல் அவித்த முட்டை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு உங்கள் உடம்புக்கு தேவையான எரிபொருளை சேர்த்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் பசியும் அதிகரிக்கும் உடம்புக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும் என்று ஷார்ப் கூறுகிறார்.

இடைவெளி விட்டு சாப்பிடுங்கள்

உங்களால் ஒரே நேரத்தில் காலை உணவை சாப்பிட முடியவில்லை என்றால் இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். 30 – 60 நிமிட இடைவெளியில் பழங்கள், முட்டை, சீஸ் ஸ்டிக், நட்ஸ் பட்டர் என்று பிரித்து சாப்பிடுங்கள் என்று ஜெய்ட்லின் கூறுகிறார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன் உங்கள் உடம்பை தயார்படுத்தி கொள்ளுங்கள்

நீங்கள் காலையில் எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது பசித்தால் என்ன செய்வீர்கள். முதலில் உங்கள் உடலுக்கு போதுமான எரிபொருள் தேவை. எனவே காலை உணவை 30 நிமிடங்களுக்குள் முடித்து விட்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களால் உடற்பயிற்சியையும் நன்றாகவும் செய்ய முடியும் என்று ஜெய்ட்லின் கூறுகிறார்.

பழச்சாறு

காலை உணவை சீக்கிரமாக தயாரித்து விடுங்கள். அப்படி உடனே முடியவில்லை என்றால் ஸ்மூத்தி அல்லது ஜூஸை உடனே தயாரித்து குடித்து விடுங்கள் என்று ஷார்ப் கூறுகிறார். காலை உணவு பிடிக்கவில்லை என்றால் இப்படி பழச்சாறுகளைக் குடிக்கலாம். ஆனால் பட்டினியாக மட்டும் இருக்கக்கூடாது.

சத்தான உணவுகள்

ஒரு நாளைக்கு தேவையான உணவு என்பது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துகளையும் கொடுக்கிறது. நீங்கள் காலை உணவை விரும்பவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். ஏனெனில் நேரம் என்பது முக்கியமல்ல. பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். வதக்கிய காய்கறிகளோடு வான் கோழி கறி, அவித்த முட்டை, வாய்க்கு ருசியான பூசணி விதைகள், காளான்கள், ஓட்ஸ் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் அல்லது வெட்டப்பட்ட செர்ரி தக்காளி கொண்ட சிற்றுண்டி அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுங்கள். இப்படி உங்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து சாப்பிடுங்கள் என்று ஜெய்ட்லின் கூறுகிறார்.

ஜீரணசக்தி

உங்களுக்கு காலையில் எழுந்ததும் குமட்டல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டால் எளிதில் சீரண மாகும் வாழைப்பழம், பிரட், ஓட்ஸ் மீல், கோதுமை க்ரீம், ஆப்பிள் சாஸ், முட்டை போன்ற உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் என்று ஷார்ப் கூறுகிறார். தினசரி புரோபயோடிக் உணவுகள் எளிதாக குடலில் சென்று சீரண மாகும். மேலும் குடல் ஆரோக்கியம், கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுதல், காலை குமட்டலை சரி செய்தல் , சீரண சக்தியை அதிகரித்தல் போன்ற நன்மைகளை நமக்கு தரும் என்று ஜெய்ட்லின் கூறுகிறார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த இலைய இப்படி சாப்பிட்டா இந்த கொடூரமான 5 நோயும் உங்கள எட்டியே பார்க்காதாம்

nathan

நுரையீரல் நச்சு சேராம சுத்தமா இருக்க இந்த 5 விஷயம் போதுமாம்..

nathan

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

nathan

henna powder in tamil – ஹென்னா பொடி

nathan

தலையில் பேன் அதிகமா இருக்கா? அதை ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ். !

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…

nathan

typhoid fever symptoms in tamil – டைபாய்டு காய்ச்சல்

nathan

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

nathan