உடற்பயிற்சிக்கு பின்பு மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு.
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருப்பதோடு, சின்னத்திரையிலும் களமிறங்கி நடித்து வருகின்றார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
திமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கி, காங்கிரஸ் கட்சிக்கு சென்று, தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் நடிகை குஷ்பு நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சமூகவலைத்தளத்தில் பிசியாக இருக்கும் நடிகை குஷ்பு தற்போது, அவர் உடற்பயிற்சிக்கு பிறகு மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார். பலரும் சூப்பர் மேடம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#NewProfilePic #eveningworkout #walk #healthylife #happymind
pic.twitter.com/L4aD7NNr6I
— KhushbuSundar
(@khushsundar) June 21, 2021