23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 thingsnottosa
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளை வளர்க்கும் விதத்திலேயே 4 விதமான பெற்றோர்கள் இருக்கிறார்களாம்… தெரிந்துகொள்வோமா?

ஒரு குழந்தையை இந்த சமுதாயத்தில் பொறுப்பாக வளர்த்து சிறந்த மனிதராக மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது. ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது ஏகப்பட்ட சவால்கள் நிறைந்தது. குழந்தைகளின் மனநிலையை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது.

சில பெற்றோர்கள் குழந்தையை அடித்து பயமுறுத்தி வழிக்கு கொண்டு வருவார்கள். சிலர் அன்பான தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மூலம் அரவணைப்பார்கள். இப்படி பெற்றோர்களில் கண்டிப்பானவர்கள், கூலான தன்மை கொண்ட பெற்றோர்கள் என வித்தியாசமாக காணப்படுகிறார்கள்.

அப்படி குழந்தைகளை கையாளும் விதத்தின் அடிப்படையில் 4 வகைகளாக பெற்றோர்களை பார்க்கின்றனர். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை. இந்த வகையில் நீங்கள் எந்த பெற்றோர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* சர்வாதிகார மற்றும் ஒழுக்கம் பெற்ற பெற்றோர்கள்

* ஒழுக்கமான நடவடிக்கைகளை கையாளும் அதிகார பெற்றோர்கள்

* அனுமதியளிக்கும் மனம் படைத்த பெற்றோர்கள்

* எதையும் கண்டுக்காத பெற்றோர்கள்

சர்வாதிகார மற்றும் ஒழுக்கம் பெற்ற பெற்றோர்கள்

இந்த வகை பெற்றோர்கள் குழந்தைகளிடம் சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தாங்கள் சொல்வதை கேட்க வேண்டும், அதைத் தான் செய்ய வேண்டும் என்று கட்டளை இடுவார்கள். தங்கள் குழந்தைகள் அதீத ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். குழந்தைகள் சொல்வதை கேட்கவே மாட்டார்கள். ஒரு வழித் தொடர்பு மட்டுமே இங்கு இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டு அதை குழந்தைகள் மேல் திணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அது குழந்தைக்கு பிடிக்குமா பிடிக்காதா அதெல்லாம் கேட்கவும் மாட்டார்கள். இவர்களிடம் மாட்டிக் கொண்டு நம்ம குழந்தைகள் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஜெயம் ரவி மாதிரி தவிக்க நேரிடும்.

விளைவுகள்

* இங்கு குழந்தைகள் விதிமுறைகளுடன் வளர்க்கப்படுவார்கள்.

* குழந்தைகள் கீழ்படிதலுடன் நடந்து கொள்வார்கள். ஆனால் அதற்கும் ஒரு விலை இருக்கும்.

* குழந்தைகளின் கருத்துக்கள் இங்கே அடக்கப்படுவதால் அவர்களுக்கு சுயமரியாதை பிரச்சனைகள் ஏற்படுகிறது.

* பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யர்களாக மாறி விடுவார்கள். சில குழந்தைகள் ஆக்ரோஷமாகக் கூட மாறுவதுண்டு.

அதிகாரப்பூர்வ பெற்றோர்கள்

இவர்கள் நடுநிலையுடன் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகள் மேல் எதிர்பார்ப்பு வைத்து இருந்தாலும் குழந்தைகளின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் செய்யும் போது இது குழந்தைக்கு பலன் அளிக்குமா என்று யோசித்து செய்வார்கள். இந்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான உறவு இருக்கும். குழந்தைகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

விளைவுகள்

* இந்த பெற்றோர்கள் வளர்ப்பில் குழந்தைகள் சுய ஒழுக்கத்துடன் வளர்வார்கள்.

* குழந்தைகள் நேர்மறையான தன்மையையும், வெற்றிகரமான வாழ்க்கையும் பெறுவார்கள்.

* குழந்தைகள் சிறந்த முடிவெடுக்கும் திறனை பெற்று இருப்பார்கள்.

அனுமதியளிக்கும் மனம் படைத்த பெற்றோர்கள்

இந்த பெற்றோர்கள் குழந்தைகளை ரொம்ப கூலாக கேன்டில் செய்வார்கள். குழந்தைகளிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். குழந்தைகளுக்கு எது விருப்பமோ அதை அனுமதிப்பார்கள். இந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஒரு நண்பனைப் போல் பழகுவார்கள். இதனால் குழந்தைகளும் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசத் தயங்குவதில்லை. இந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விதிகள் எதுவும் அமைக்காமல் ஆதரவாக மட்டும் செயல்படுவார்கள்.

விளைவுகள்

* விதிகளுக்கு கீழ் இந்த குழந்தைகள் வளருதில்லை என்பதால் நடத்தை சிக்கலை சந்திக்கின்றனர்.

* இந்த குழந்தைகளால் விதிகள், அதிகாரத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

* இந்த குழந்தைகள் படிப்பில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

* குழந்தைகள் மீது எந்த கட்டுப்பாட்டையும் விதிக்காமல் இருப்பதால் குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிடுவது அதிகமாகிறது. பெரும்பாலும் இவர்களின் குழந்தைகள் உடல் பருமனுடன் இருக்கின்றனர்.

* வாழ்க்கையில் சோகம் வந்தால் தாங்க முடியாமல் தவிப்பார்கள்.

எதையும் கண்டு கொள்ளாத பெற்றோர்கள்

இந்த பெற்றோர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் பெரிதாக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். குறைந்த அக்கறை மட்டுமே இருக்கும். குழந்தைக்கு என்ன தேவை என்பது கூட கண்டு கொள்ள மாட்டார்கள்.

விளைவுகள்

* இதன் கீழ் வளர்க்கப்படும் குழந்தைகள் சுயமரியாதை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

* இந்த குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள்

* இந்த குழந்தைகள் பிடிவாதமாக வளர்ந்து நடத்தை சிக்கலை சந்திப்பார்கள்.

Related posts

பெண்களே நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் இதை செய்யுங்க…

nathan

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

nathan

சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!

nathan

நுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்!

nathan

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள் நாளடைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

nathan

அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு. நுரையீரல் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை.!

nathan

எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை வாங்காதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan

ஏசி’யிலேயே இருப்பவரா?

nathan