24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
schezwan potato
ஆரோக்கிய உணவு

சுவையான உருளைக்கிழங்கு சீசுவான்

சைனீஸ் ஹோட்டல் சென்றால் அங்கு சீசுவான் ரைஸ் என்ற சைனீஸ் கலவை சாதத்தைப் பார்த்திருப்பீர்கள். இது வித்தியாசமான சுவையில் சைனீஸ் சாஸ்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான சாதம். ஆனால் அந்த சீசுவான் ரைஸ் போன்றே உருளைக்கிழங்கு சீசுவான் என்ற சைனீஸ் ரெசிபியும் உள்ளது. இதனை வீட்டிலேயே சிம்பிளான செய்முறையுடன் செய்யலாம்.

இங்கு அந்த உருளைக்கிழங்கு சீசுவான் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Schezwan Potatoes
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கிற்கு…

உருளைக்கிழங்கு – 3
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சீசுவான் கிரேவிக்கு…

பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பூண்டு – 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
சீசுவான் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
சோயா சாஸ் – 2 டீஸ்ழுன்
தண்ணீர் – 4-6 டேபிள் ஸ்பூன்
வெள்ளை வினிகர் – 1/2 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் (2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நீளமாக வெட்டி, குளிர்ந்த நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நீரை முற்றிலும் வடித்து, அதில் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கிரேவி செய்யும் முறை…

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து தீயை அதிகரித்து 1-2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் அதில் வரமிளகாய் சேர்த்து 1-2 நிமிடம் வதக்கி, பின் சோயா சாஸ், சீசுவான் சாஸ், வினிகர், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, பின் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் சோள மாவு பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு சீசுவான் ரெடி!!!

Related posts

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்

nathan

அரிசி உணவுக்கும் உருளைக்கும் ஒத்துவராது!

nathan

சூப்பர் டிப்ஸ்- இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.

nathan

பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இத படிங்க

nathan

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan