நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்களில் பெருஞ்சீரகத்துக்கு முக்கிய பங்குண்டு, பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பெருஞ்சீரகத்தில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
எடையை குறைக்க
வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை ஒருவர் குடித்துவந்தால், உடல் எடையை குறைக்கலாம்.
மேலும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேறுவதைத் தடுக்கும்.
அத்துடன் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபடவும் உதவும்.
கண்கள் பலமடையும்
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ உடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இது கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு
பெருஞ்சீரகத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக்கும், சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் காலத்தில்
மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களால் அவஸ்தைப்படுவார்கள். இதிலிருந்து விடுபட பெருஞ்சீரக நீர் உதவியாக இருக்கும்.
மாதவிடாய் சுழற்சி பிரச்சனை இருப்பவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தாலும் மாதவிடாய் சுழற்சி பிரச்சனை சரியாகும்.