31.9 C
Chennai
Friday, May 31, 2024
0 raw banana roast
சமையல் குறிப்புகள்

சுவையான வாழைக்காய் ரோஸ்ட்

வீட்டில் வாழைக்காய் இருந்தால், மாலை வேளையில் வாழைக்காய் பஜ்ஜி தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக வாழைக்காயை ரோஸ்ட் செய்து, டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிடலாம். மேலும் வாழைக்காய் ரோஸ்ட் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

இங்கு வாழைக்காய் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Raw Banana Roast
தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

மசாலாவிற்கு…

தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் வாழைக்காயை சேர்த்து, 3-4 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து, நீரை வடிகட்டி, வாழைக்காயை குளிர வைக்க வேண்டும்.

பின்பு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அந்த மசாலாவை வாழைக்காயில் போட்டு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைக்காய் ரோஸ்ட் ரெடி!!!

Related posts

சுவையான தக்காளி குருமா

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

சுவையான காராமணி பொரியல்

nathan

சூப்பரான முருங்கைக்கீரை தோசை

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

சுவையான பரோட்டா சால்னா

nathan

கொண்டைக்கடலை சமைப்பது எப்படி ? | chickpeas in tamil

nathan

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan