26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
cover 1532685195
ஆரோக்கிய உணவு

காளானை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும். உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் எல்லா வித சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய ஒரு தாவரமாகும்.

பட்டன், சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன.

 

இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மைகள்

 

ஆண்களுக்கு புராஸ்சுடேட் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து தப்பிக்க வாரம் 3 முறை உணவில் காளான் சேர்த்துக் கொள்ளலாம்.
காளான்களில் உள்ள ரிபோநியூக்ளியோடைட்கள் மற்றும் குளூட்டோமேட்கள் உங்களை மாரடைப்பு போன்ற இதயநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இவற்றை சமையலில் உப்புக்கு பதிலாக சேர்க்கலாம்.
காளான்களில் ஃபோலேட் அமிலம் உள்ளதால் அது கர்ப்பகாலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
காளான்களில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
காளான்களில் உள்ள மைக்ரோஃபேஜ்கள் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காளான்கள் சாப்பிடலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் பிற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வல்லது.

காளானில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.
காளானில் உள்ள இதிலுள்ள வைட்டமின் பி1 நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
காளானில் உள்ள ஹைலூரானிக் அமிலம் சருமங்களில் ஈரப்பதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதிலுள்ள கோஜிக் அமிலம் தோல் சுருக்கம், முகத்தில் கோடுகள் போன்ற வயது முதிர்வுக்கான பிரச்சனைகளை தடுத்து இளமையான தோற்றம் பெற உதவுகிறது.
​யாரெல்லாம் காளான் சாப்பிடக்கூடாது?

 

காளான் பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டுள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் நிச்சயம் காளான்களை தவிர்க்க வேண்டும்.
கீழ்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்க்க கூடாது.
குறிப்பு

காளான் சேர்ப்பதால் தோல் அலர்ஜி, வாந்தி, படபடப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உபயோகிப்பதற்கு முன் அது நல்ல காளானா இல்லை நஞ்சு கலந்த காளானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

Related posts

தேங்காயை அரைக்காமலேயே இலகுவாக‌ கெட்டியான‌ தேங்காய்ப்பால் எடுப்பது எப்படித் தெரியுமா!இத படிங்க!

nathan

ஆரோக்கியத்தை குறைக்கும் உப்பு

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

காட்டுயானம் அரிசி தீமைகள்

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan

தெரிஞ்சிக்கங்க… தினமும் ‘பிளாக் டீ’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.

nathan