எடை குறையஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!தெரிஞ்சிக்கங்க…

orange juice

 

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Related posts

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்

nathan

குறைந்தது 50 வயது வரை உயிருடன் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள்!!!

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

நடக்கும் அதிசயம்!காலை எழுந்தவுடன் இந்த பொருளை சாப்பிட்டால் போதும் !

nathan

பூண்டுப் பால்! weight loss tips

nathan