31.2 C
Chennai
Sunday, May 18, 2025
ld1215
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் உண்டா?

இந்த சந்தேகங்களுக்கு பதில் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்.

“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்னை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்னை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது… அவசியமானதும்கூட!

சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்னை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.”

Related posts

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

nathan

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த அறிகுறிகள் இருந்தா கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்

nathan

சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்

nathan

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருக்கலைப்பு பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan

மார்பக புற்றுநோய்-

nathan

ஆற்றலை தரும் சப்போட்டா…!!

nathan