25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 6214df0d08
ஆரோக்கிய உணவு

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..?

பொதுவாக அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும்.

இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது.

இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை இதில் அடங்கியுள்ளது. இதில் பல நன்மைகள் உள்ளன.

அதிலும் வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்து வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய தலைமுடி உதிர்வு பிரச்சனை கட்டுப்படுத்தலாம்.

வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்து வாருங்கள். அதோடு சாப்பிட்டவுடன் வெறும் வெற்றிலையை மென்று விழுங்குங்கள். இதனால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் இருக்காது.

முகத்தில் பருக்கள் இருப்பின் வெற்றிலையை அரைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள். அதிலும் வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தை கழுவி வந்தாலும் பருக்கள் அகலும்.

தோல் அரிப்பு, சொறி, ஒவ்வாமை இருப்பின் வெற்றிலை கொதிக்க வைத்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து தினமும் குளித்து வாருங்கள். அதோடு அரிப்பு உள்ள இடங்களிலும் அரைத்து தடவி வாருங்கள். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, ஒவ்வாமையை போக்க உதவும்.

உடல் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் வெற்றிலை அதற்க்கு உதவலாம். வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வாருங்கள். அதோடு வெற்றிலை நீரை குடித்து வந்தாலும் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். துர்நாற்றமும் இருக்காது.

Related posts

படிக்கத் தவறாதீர்கள்! 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சீனர்களுக்கு வழுக்கை வராமல் இருக்க காரணம் அவர்கள் சாப்பிடும் இந்த காய்தானாம்!

nathan

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

nathan

சம்மர் ஸ்பெஷல் முலாம் – தர்பூசணி ஜூஸ்! ~ பெட்டகம்

nathan

ருசியான சத்தான வாழைப்பழ தோசை!

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

nathan

ருசியான பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…!

nathan

என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு

nathan

எப்போதும் இளமை வேண்டுமா?

nathan