33.9 C
Chennai
Thursday, May 15, 2025
1504695167 0051
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம்

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.

 1504695167 0051
இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது  பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது.
வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம்.  இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம்  மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன.  இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன.
தேவையான பொருட்கள்: கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் – அரை ஸ்பூன், பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 3  டீஸ்பூன். கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக  கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த  நீரில் கழுவ வேண்டும்.
இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி,  தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.
* வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம். பாதத்தில் ஏற்படும்  வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகும்.
* கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள்  நீங்கும். கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
* பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு  இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.
* கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக்  குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.
* மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக்  குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.
* பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும்  மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.

Related posts

வசிய மூலிகைப் பற்றி தெரியுமா?அதெப்படி உங்களுக்கு நன்மை தரும்? உங்களுக்காக ஒரு அரிய சித்த வைத்தியம்!!

nathan

சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

nathan

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வந்தால் முகம் பொலிவடையும்.

nathan

அலியா பட்டின் அழகின் ரகசியம் யாருக்காவது தெரியுமா ?

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

முகம் பொலிவு பெற…

nathan

இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

nathan

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika