30.5 C
Chennai
Friday, May 17, 2024
ytyt
அழகு குறிப்புகள்

அற்புதமான அழகு குறிப்புகள்…!! சரும நிறத்தை மேம்படுத்த

பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முக பூச்சுகள்தான்.

இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களால்தான் எந்தவித பாதிப்பு இல்லை என்பது உண்மையான விஷயம்.

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம். தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 அல்லது 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.
ytyt
முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2-3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Related posts

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

சுவையான தயிர் ரவா தோசை

nathan

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

இந்த 6 இடத்துல மச்சம் இருக்குறவங்களுக்கு பணக் கஷ்டமே வராதாம்… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

பன்னீர் பக்கோடா

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

திடீரென ஏற்படும் சரும மாற்றங்களை சமாளிப்பது எப்படி?

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan