தற்போது பலரும் ஆமை மோதிரத்தை அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆமை மோதிரத்தின் பலன்கள் மற்றும் நன்மைகள் மற்றும் அதை அணிவதற்கான சரியான வழியை அறிந்து கொள்ளுங்கள்.
ஆமை மோதிரம் அணிவதால் செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைந்தெடுக்கும் போது, பாற்கடலிலிருந்து வந்தவர் மகாலட்சுமி.
இதனால் இந்த மோதிரத்தை அணிபவர்களுக்கு மகாலட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.
சுப பலன்கள், சுப காரியங்கள் விரைவாக நடக்கும் என்பது ஐதீகம்.
தண்ணீரில் வாழக்கூடிய ஆமை போல, நம் உடல் குளிர்ச்சி அடைவதோடு, மனமும் நிதானமடையும். மென்மையான நடத்தை உருவாக்க உதவுகிறது.
தொழில் முன்னேற்றத்திற்காக இந்த திசையில் ஒரு கருப்பு ஆமை வைத்திருங்கள், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆமை மோதிரத்தை அணிவது எப்படி
ஆமை மோதிரத்தை அணிய நினைப்பவர்கள் மோதிரத்தில் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் அல்லது கட்டை விரலுக்கு அருகில் உள்ள ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.
இந்த இரு விரல்களில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம்.
எந்த நாளில் அணிவது நல்லது?
மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படும் இந்த ஆமை மோதிரத்தை வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமி தேவியை வழிபட்டு அணிவது நல்லது.
எந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியக்கூடாது?
நீர், நிலத்தில் ஆமை வாழ்ந்தாலும், பெரும்பாலும் நீரில் வாழ்வதால், நீரில் அதிகம் வாழக்கூடிய உயிரினம் என்பதால், நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினர் இந்த ஆமை மோதிரத்தை அணியக்கூடாது.
இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மோதிரம் சாதகமாக கருதப்படுவதில்லை.
அணிவதன் மூலம் குளிர் தன்மை அதிகரிக்கிறது, இது உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனை நேரடியாக பாதிக்கும்.