ஆரோக்கியம் குறிப்புகள்

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

ஏறத்தாழ உலகையே ஆண்ட பேரரசன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர். ஐரோப்பா, ஆசியா போன்ற கண்டங்களின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுபாட்டில் வைத்திருந்தான். சென்ற இடமெல்லாம் வெற்றி, தனது 16 வயதில் அரியணை ஏறியது முதல் இறக்கும் வரையில் சண்டையிட்ட அனைத்து போரிலும் வெற்றியை ருசித்து சாதித்தவன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர்.

 

கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32வது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர் இழந்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன.

 

இனி, மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்…..

15 வருட வெற்றிநடை

15 வருடங்கள் தொடர்ந்து போர் செய்து, ஓர் போரில் கூட தோல்வியடையாமல், முழுமையான வெற்றியை ருசித்தவன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர்.

அரிஸ்டாட்டிலின் மாணவன்

தனது 16வது வயது வரை அரிஸ்டாட்டிலிடம் மாணவனாக இருந்து பாடம் கற்றார் அலெக்ஸ்சாண்டர். 16 வது வயதிலே இவர் அரசனாக அரியணை ஏறியது குறிப்பிடத்தக்கது.

குங்குமப்பூவில் தலைக்கு குளித்தல்

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் குங்குமப்பூவில் தான் தலைக்கு குளிப்பார். இதனால், தனது கூந்தல் மினுமினுப்பாகவும், ஆரஞ்சு வண்ணத்திலும் ஜொலிக்கும் என அலெக்ஸ்சாண்டர் இதைப் பின்பற்றி வந்தார்.

பூனையென்றால் பயம்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், முசோலினி போன்றவர்களுக்கு பூனை என்றால் பயம். இதை ஆங்கிலத்தில் “Ailurophobia” என்று குறிப்பிடுகிறார்கள்.

இரு வண்ண கண்கள்

மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் இரு கண்களும், இரு வண்ணங்களில் இருக்கும். ஓர் கண் நீல நிறமாகவும், மற்றொரு கண் பிரவுன் நிறமாகவும் இருந்தது.

பெர்சியன் வெற்றிக்கு பிறகு

பெர்சியன்களை வெற்றிப்பெற்ற பிறகு, பெர்சியன் போலவே உடை அணிய ஆரம்பித்தார் அலெக்ஸ்சாண்டர். மற்றும் இரு பெர்சியன் பெண்களை மணந்துக் கொண்டார்.

70 நகரங்களை கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர்

ஏறத்தாழ 70 நகரங்களை கண்டுபிடித்தான் அலெக்ஸ்சாண்டர். இதில் 20 நகரங்களுக்கு தானே பெயர் சூட்டினான். இதில் ஓர் நகருக்கு தனது குதிரையின் பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது.

பல நாடுகளை ஆண்ட மன்னன்

ஒரே நேரத்தில், ஆசியா, பெர்சியா, எகிப்து, மாசிடோனியா போன்ற பகுதிகளை ஆண்ட ஒரே மன்னன் அலெக்ஸ்சாண்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸ்சாண்டரின் விஷப்பரீட்சை

ஒருமுறை மாவீரன் அலெக்ஸ்சாண்டர் மதுவருந்தும் போட்டி ஒன்று நடத்தினார். இதில் பங்கெடுத்த வீரர்களில் 42 பேர் ஆல்கஹால் பாய்சனால் உயிரிழந்தனர்.

பிடல் காஸ்ட்ரோவின் மகன்கள்

பிடல் காஸ்ட்ரோவின் மூன்று மகன்களின் பெயரும் அலெக்ஸ்சாண்டர் தான். அலெக்ஸ்யிஸ், அலெஜான்த்ரோ மற்றும் அலெக்ஸ்சாண்டர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button