மருத்துவ குறிப்பு

பாதத்தில் அடிக்கடி எரிச்சல் உண்டாகிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

வசந்த காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாக வெயில் காலம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. வெயில் காலத்தின் வெப்பத்தை சமாளிக்க நாம் நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதே 35 டிகிரி வெயில் தலைக்கு மேல் உட்காரத் தொடங்கிவிட்டது. வெயிலினால் பல சரும பிரச்சனைகள் ஏற்படும். சரும சேதம், சருமத் துளைகள் திறப்பு, கை மற்றும் கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது, கண் எரிச்சல் போன்றவை வெயிலின் கொடுமையால் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் ஆகும். இவற்றை எல்லாம் மீறி, நாம் எப்படி நம்மை குளுமையாக வைத்துக் கொள்வது?

1. உணவு

லைட்டான உணவுகள் வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது. உணவுகளில், பொரித்த உணவுகள் சிற்றுண்டிகள், கிரேவிகள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உங்கள் தினசரி உணவில், மோர், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். வெயில் காலத்திற்கேற்ற தர்பூசணி, கிர்ணி , வெள்ளரிக்காய், பச்சடி , சுரக்காய் . போன்ற காய்கறி மற்றும் பழங்களை அடிக்கடி சாப்பிடலாம். உங்கள் உணவு , சாலட் , மற்றும் குளிர்பானங்களில் புதினாவை சேர்த்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடையும்.

2. வெயில் சூட்டை தணிக்க அழகு குறிப்புகள் :

மேலே கூறப்பட்ட டயட்டுடன் சேர்த்து, சில எளிய அழகு குறிப்புகளும் பின்பற்றி இந்த வெயிலின் சூட்டை தணித்துக் கொள்ளலாம். பெண்கள் இவற்றைப் படித்து முயற்சித்து வெயில் காலத்தை குளிர்ச்சியாக மாற்றிக் கொள்ளலாம்.

3. கை மற்றும் கால் பாத எரிச்சல்

கை மற்றும் கால் பாதங்களில் அதிக எரிச்சலை உணர்பவர்கள், பாகற்காயை நறுக்கி, அதனை உங்கள் பாதத்தில் மற்றும் உள்ளங்கையில் தேய்க்கலாம் . இப்போது உங்கள் உடலில் ஒரு குளிர்ச்சித் தன்மையை உணரலாம்.

4. கண் எரிச்சல்

டீக்கு பயன்படுத்திய டீ பைகளை ஃபிரீசரில் சில நிமிடம் வைத்திருந்து குளிர்ந்தவுடன் அவற்றை எடுத்து உங்கள் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். பஞ்சை பன்னீரில் நனைத்து அல்லது வெள்ளரிக்காயை வட்ட வடிவத்தில் நறுக்கியும் கண்களில் வைத்துக் கொள்ளலாம். இதனால் கண்கள் அதிக குளிர்ச்சி அடையும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

5. பொலிவான சருமத்திற்கு

பன்னீரை எப்போதும் ஃ பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். அடிக்கடி அதனை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தெளித்து கொள்ளவும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரு பாட்டில் பன்னீரை உங்கள் மேஜையில் வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் உள்ளவர்கள், இதனை தொடர்ந்து முயற்சிக்கலாம். குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரி முடிந்து வீடு திரும்பியவுடன் அவர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி முகம் கழுவுவதால் உடனடியாக நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

தர்பூசணியை உட்கொண்டவுடன் அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். அந்த தோலை பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் சென்று வந்தவுடன் அந்த தோலை எடுத்து உங்கள் முகம், கண்கள், கை காலில் தேய்த்துக் கொள்வதால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல், இப்படி செய்வதால் உடல் குளிர்ச்சி அடையும், சருமம் மென்மையாகும், மேலும் சருமம் வறண்டு போகாமல் நீர்ச்சத்தோடு இருக்கும்.

6. சரும துளைகள்

வெயில் காலங்களில் சரும துளைகள் திறந்திருக்கும். இது ஒரு மிகப்பெரிய சரும பிரச்சனையாகும். ஒரு தக்காளியை இரண்டு துண்டுகளாக நறுக்கி ஃபிரீசரில் வைத்துக் கொள்ளவும். பிறகு நன்கு குளிர்ந்தவுடன் அவற்றை எடுத்து உங்கள் சருமத்தில் அந்த சாறு இறங்கும்படி வைக்கவும். தக்காளியை மென்மையாக உங்கள் சருமத்தில் தேய்க்கவும். இதனைத் தொடர்ந்து செய்வதால் உங்கள் சரும துளைகள் சுருங்கத் தொடங்கும்.

7. தலை முடி பிரச்சனை

வெயில் காலங்களில் பெரும்பாலானவர்கள் தலையில் கட்டிகள் தோன்றும். அதிகமான சூடு தான் இப்படி கட்டிகள் தோன்றக் காரணமாக இருக்கிறது. இந்த கட்டிகளைப் போக்க ஒரு எளிய வழி, வேப்பிலை நீரால் தலை அலசுவது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு கொதிக்க வைக்கவும் . அதனை ஆற விடவும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது, பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவால் தலையை அலசியவுடன், இந்த வேப்பிலை நீரால் தலையை கடைசியாக ஒரு முறை அலசவும்.

வறண்ட தலைமுடி இருப்பவர்கள் , முல்தானி மட்டியுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல கலந்துகொண்டு, அதை உங்கள் தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு தலையை அலசலாம். எண்ணெய்ப் பசை தன்மை கொண்ட தலைமுடி உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் தயிர் சேர்த்து இந்த கலவையை தலையில் தடவலாம். பிறகு 15 நிமிடம் கழித்து தலையை அலசவும்.

8. உடல் துர்நாற்றம்

வெயில்காலத்தில் உடல் நாற்றம் என்பது ஒரு முக்கிய பிரச்சனை. இதனை போக்க நாம் அணியும் ஆடைகள் காட்டனாக இருத்தல் வேண்டும். சிந்தடிக் ஆடைகளை உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். லைனான் ஆடைகளும் உடுத்தலாம் . காற்றோட்டம் உள்ள ஆடைகளை அணியலாம். இறுக்கமாக உடை உடுத்துவதை தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை காலையும் மாலையும் குளிக்கவும். அப்படி குளிக்கும்போது அந்த நீரில், எலுமிச்சை, கிச்சலி, நல்ல வாசனை உள்ள மூலிகை செடி எண்ணெய் போன்றவற்றை சில துளிகள் விட்டு, கடைசி கப் தண்ணீர் ஊற்றும்போது இந்த நீரை ஊற்றலாம். பாத் டப்பில் குளிப்பவர்கள், அந்த நீரில் கல் உப்பு, எலுமிச்சை துண்டுகள், மல்லிகை மலர், போன்றவற்றை கலந்து கொள்ளலாம். இந்த நீருடன் ஒரு கப் பால் சேர்ப்பதால் இன்னும் அதிக நன்மை கிடைக்கும் மேலும், சருமம் மென்மையாகவும், நீர்சத்தோடும் இருக்கும்.

இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் சருமத்தை சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button