ஆரோக்கிய உணவு

சுவையான பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

பொதுவாக நல்ல நாளன்று பெரும்பாலான வீடுகளில் பூசணிக்காய் செய்யும் பழக்கம் இருக்கும். அதிலும் பூசணிக்காய் பொரியல் செய்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் இங்கு பூசணிக்காயை தட்டைப்பயறுடன சேர்த்து எப்படி கூட்டு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், ருசியாகவும் இருக்கும்.

மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இது சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Pumpkin And Cow peas Kootu
தேவையான பொருட்கள்:

மஞ்ச பூசணிக்காய் – 4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
தட்டைப்பயறு – 1 கக்ப
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப் (துருவியது)
வரமிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தட்டைப்பயறை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து குக்கரை இறக்கி, விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும்.

பின்னர் மிக்ஸியை எடுத்துக் கொண்டு, அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பூசணிக்காய், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறை சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 10 நிமிடம் கெட்டியாக கூட்டு போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்து கிளறினால், பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு ரெடி!!!

Related posts

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! வல்லாரைக் கீரை சட்னி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்

nathan

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

தெரிஞ்சிக்கங்க…இனி ரோஜா மொட்டுகளை கீழ தூக்கி வீசாதீங்க! டீ போட்டு குடித்தால் இந்த பிரச்சினைகளெல்லாம் சரியாகுமாம்!

nathan

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால்..!!ஐஸ்வர்யம் பெருகுமாம்

nathan

சிறுநீரகம் நன்றாக செயல்பட சிறந்த உணவு முறை எது தெரியுமா?

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

nathan