26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1523944849
ஆரோக்கியம் குறிப்புகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு வெங்காயம் இப்படி எல்லாம் பயன்படுத்தலாம்!தெரிஞ்சிக்கங்க…

இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான சமையல் பொருட்களில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. அதை உணவில் பயன்படுத்துவதால் மட்டுமல்ல அதனை நாம் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

கைக்குழந்தைகள், இன்னமும் பேசவே ஆரம்பிக்காத குழந்தைகள் தங்களுக்கு எதவது அசௌகரியம் ஏற்பட்டால் எதாவது தேவை ஏற்பட்டால் அவர்களது ஒரே ஆயுதம் அழுகை, எதற்காக அழுகிறார்கள், என்ன தேவை என்பதை நம்மால் ஒரு போது புரிந்து கொள்ளவே முடியாது. சில நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கூட நம்மால் கண்டுகொள்ள முடியாது. இப்படியிருக்கும் பட்சத்தில் நம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருளான வெங்காயத்தை வைத்து குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

சிகப்பு வெங்காயம் :

நன்றாக ரோஸ் நிறத்தில் இருக்கக்கூடிய வெங்காயத்தினை இதற்கு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் வெங்காயத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் கால்சியம், சல்ஃபர்,விட்டமின் ஏ,சடிவிட்,இரும்புச்சத்து, விட்டமின் பி மற்றும் சி,ப்ரோட்டீன் ஆகியவை இருக்கிறது.

காய்ச்சல் :

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அடிக்கடி இவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும். இதனை தவிர்க்க வெங்காயம் பெரிதும் பயன்படும் ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட குழந்தை என்றால் ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு கொடுக்கலாம்.

குழந்தைக்கு ஏதேனும் அலர்ஜி இருக்கிறது அல்லது தொடர்சியாக குழந்தை மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மருத்துவரிடம் காட்டுவது தான் நல்லது.

இருமல் :

இந்த வெங்காயம் காய்ச்சல் மட்டுமல்ல இருமலையும் குறைக்கக்கூடியது, தொண்டையில் வைரஸ் அல்லது பேக்டீரியா தொற்று ஏற்பட்டால் கூட குழந்தைகளுக்கு இருமல் வரும். இதனை தவிர்க்க வெங்காயத்தை மைய அரைத்து பத்து போல போடலாம். அதிக காரமாக இருக்கும் என்பதால் திக்காக போட வேண்டாம். இது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

வயிறு :

குழந்தைகள் தானாக போதும் என்று சொல்லத்தெரியாது என்பதால் நாம் ஊட்டும் போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள் இதனால் இவர்களுக்கு அடிக்கடி அஜீரணக்கோளாறு ஏற்படக்கூடும். அதனை தவிர்க்க வெங்காயத்தை பயன்படுத்தலாம். தாய்ப்பால் அளவுக்கு அதிகமாக குடித்தால் கூட குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். இதனை தவிர்க்க வெங்காயத்தை பாதியாக கட் செய்து கொள்ளுங்கள்.

அதனைக் கொண்டு லேசாக குழந்தையின் வயிற்றில் தடவி விடுங்கள். பின் ஐந்து நிமிட இடைவேளிக்குப் பிறகு மீண்டும் தடவ வேண்டும். இப்படியே சுமார் பதினைந்து நிமிடங்கள் செய்யுங்கள் பிறகு மறக்காமல் குழந்தையின் வயிற்றுப்பகுதியை துடைத்து விடுக்கள்.

சளித்தொல்லை :

இந்த காரணத்தால் தான் குழந்தைக்கு சளித்தொல்லை ஏற்படுகிறது என்று நாம் வரையறுத்துக் கூறவே முடியாது. சில நேரங்களில் லேசான பணிக்கு கூட சளித்தொல்லை ஏற்பட்டுவிடும். அது போன்ற நேரத்தில் வெங்காயம் உங்களுக்கு நல்லபடியாக கை கொடுக்கும். முதுகு தொண்டை நெஞ்சு ஆகிய பகுதிகளில் வெங்காயச் சாறினை கொண்டு குழந்தைக்கு லேசாக மசாஜ் செய்திடலாம்.

அலர்ஜி :

சற்று நடக்கப் பழகிய குழந்தையென்றால் எங்காவது நடந்து கொண்டேயிருக்கும் எதையாவது பிடித்து இழுப்பது, கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் வைப்பது என சேட்டை செய்து கொண்டேயிருக்கும். என்ன தான் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் நமக்கும் தெரியாமல் குழந்தைகளின் கைகளில் கிருமி இருக்க வாய்ப்புண்டு. இதனால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஒவ்வாமை ஆகியவை ஏற்படலாம். இதனை தவிர்க்கவும் வெங்காயம் பயன்படுகிறது.

சிறுநீர் :

குழந்தைகளிடத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை இது. பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் ஆசிரியரிடம் சொல்ல பயந்து கொண்டோ அல்லது தயங்கிக் கொண்டோ நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பார்கள். சில நேரத்தில் குழந்தைகள் வீட்டிலேயே கூட சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்கி நின்று கொண்டிருப்பார்கள். குழந்தை சரியான நேரத்திற்கு சிறுநீர் கழிக்கிறதா என்பதை பெற்றோர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நீர்கடுப்பு ஆகிய பிரச்சனைக்கும் வெங்காயம் பயன்படுகிறது.

மசாஜ் :

பச்சிளம் குழந்தைகளுக்கு சில ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்கிறார்கள் என்றால் அதில் சிறிதளவு வெங்காயச் சாறினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொசுக்கடி :

குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால் கொசுக்கடி ஏற்பட்ட இடம் சிவந்து தடித்து காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இதனை தவிர்க்கவும் நீங்கள் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

கொசுக்கள் மூலமாகத்தன இன்று பல நோய்கள் பரவுகிறது என்பதால் நீங்கள் சற்று ஜாக்கிறதையாகவே குழந்தையை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எலும்புகள் :

குழந்தைப் பருவம் தான் எல்லாமே வளரும் பருவம் இந்தப் பருவத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளின் எலும்பு வளர்சிக்கு துணையாய் இருக்கிற விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

வெங்காயத்தில் இருகக்கூடிய பல சத்துக்கள் குழந்தைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபவை. இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும்.

வியர்வை நாற்றம் :

தெருவில் ஓடியாடி விளையாடும் குழந்தை என்று சொன்னால் இந்த வெயில் காலத்திற்கு குழந்தையின் தலையில் அதிக வியர்வை ஏற்படும். அதனை தவிர்க்க வெறுமனே குழந்தைகளின் தலைக்கு தண்ணீரை ஊற்றுவதை விட வெங்காயச்சறினைக் கொண்டு தலைமுழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வைக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்தவேண்டும்..

nathan

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களிடம் இப்படி நடந்து கொண்டால், அவர்கள் உங்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்!

nathan

உங்க ராசி விஸ்வாச குணமுள்ள ராசியா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் காதலில் ரொம்ப மோசமானவர்களாம்…

nathan

உடல் எடை மற்றும் தாய்ப்பால் இரண்டிலும் ஏன் பெண்கள் கவனம் தர வேண்டும்?

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்.. டிப்ஸ்…

nathan