22 61dc9e789b4a6
ஆரோக்கிய உணவு

பேரீச்சம் பழத்தினை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து? தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க…!

பேரீச்சம் பழத்தில் அதிக‌ப்படியான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதில் பொட்டாசியம், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை உள்ளன.

அதேவேளை, பேரீச்சம்பழம் எவ்வித ரசாயனங்களையும் சேர்க்காமல் இருந்தால் அது வயிற்றூக்கு எந்த பிரச்சனையும் உண்டாக்காது.

 

ஆனால் உலர வைக்கப்படும் போது அதில் பாக்டீரியாக்கள் சேராமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயன கலவைகளில் சல்பைட்டுகளும் ஒன்று.

இதனால் வயிறு வலி, வாயு வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சில எதிர்விளைவுகள் பாதிக்கப்படலாம்.அதிக அளவு பேரீச்சம்பழம் எடுத்துகொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிரச்சனைக்கு வழிவகுக்க செய்யும்.

எனினும் இது குறித்த ஆய்வுகள் குறைந்த அளவே என்றாலும் வயிற்றுப்போக்கு மோசமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பேரீச்சம் பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்க்கலாம்.
அதிகமாக பேரீச்சை சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை சந்திக்க நேரிடும்.
பேரீச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
உலர்பேரீச்சம் பழத்தில் இருக்கும் ஹிஸ்டமின் சிலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
டைப் -2 வகை நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மெழுகு போன்ற பொருட்களை தடவி விற்பனை செய்யப்படும் பேரிச்சம் பழத்தை வாங்கி உட்கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
நாள்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
நார்ச்சத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம், ஒருவயதிற்கும் குறைவான குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
பேரீச்சம்பழம் அதிக அளவு எடுத்துகொள்ளும் போது ஆஸ்துமாவை உண்டாக்க வாய்ப்புண்டு.
பேரீச்சை நார்ச்சத்து அதிகம் உள்ளவை. இது கலோரிகளாலும் நிரம்பபட்டுள்ளது. இதனால் இது எடை அதிகரிப்புக்கு பங்களிக்க வாய்ப்புண்டு.

Related posts

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்!

nathan

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan

கீழாநெல்லி சாப்பிடும் முறை

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!

nathan

உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’ -தெரிஞ்சிக்கங்க…

nathan

சீனி பணியாரம்

nathan

மூக்கிரட்டை கீரை பயன்கள் (Mookirattai Keerai Benefits)

nathan