அழகு குறிப்புகள்

குறைபிரசவ குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனைமுறை தாய்ப்பால் தர வேண்டும்?

குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம் மட்டுமல்ல சந்தோஷமான விஷயமும் கூட. ஒரு குழந்தை தாயின் கருவறையில் 40 வாரங்கள் இருந்து வளரும். ஆனால் சில சமயங்களில் சில கருவுற்ற பெண்களுக்கு குழந்தை பிறப்பு 37 வது வாரத்திலேயே ஏற்பட்டு விடுகிறது.

இந்த மாதிரியான குறை மாதக் குழந்தைகளை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒவ்வொரு தாய்மார்களும் இதை நினைத்து பெரிதாக கவலை கொள்கின்றனர்.
சரி வாங்க குறை மாதக் குழந்தைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்

கவனிப்பு

குறை மாதக் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை 3 கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறந்திருந்தால் அடிக்கடி மருத்துவரை அணுகி அவர்களின் எடையின் முன்னேற்றத்தை கவனிக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. எனவே உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் தாய்ப்பால் சேகரிக்கும் கருவி கொண்டு கூட பாட்டிலில் பாலை சேகரித்து கொடுக்கலாம். பார்முலா மில்க் கொடுக்கும் போது மருத்துவர் பரிந்துரைக்கும் லாக்டோஜன் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அதிலும் குறை மாதக் குழந்தைகள் விட்டமின் மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறையால் இருப்பார்கள். எனவே அவர்களுக்கு நான்கு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை இரும்புச் சத்து டானிக் கொடுக்க வேண்டும்.

வளர்ச்சி

குறை மாதக் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பான குழந்தைகள் மாதிரி இருக்காது. அவர்களின் வளர்ச்சி மெதுவாகத் தான் இருக்கும். உட்காருதல், தவழ்தல் மற்றும் நடத்தல் எல்லாம் மெதுவாகத்தான் நடக்கும். எனவே மருத்துவர்கள் அறிவுரைகளின் பேரில் அவர்களின் வளர்ச்சியை கவனித்து வருவது நல்லது.

பாலூட்டுதல்

குறை மாதக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 8-10 தடவை பாலூட்ட வேண்டும். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பாலூட்டுதல் தேவைப்படும். உங்கள் பாலூட்டும் முறை சரியாக இருந்தால் ஒரு நாளைக்கு 8 தடவை அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். பாலூட்டிய பிறகு அவர்களுக்கு எதுக்களித்தல் ஏற்படலாம். இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் அவர்களின் எடையில் முன்னேற்றம் இருக்கிறதா என்பதை மட்டும் அடிக்கடி மருத்துவரை அணுகி கண்காணித்து கொள்ள வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

திட உணவுகள்

முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளுக்கு 4-6 மாதங்களிலே திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் குறை மாதக் குழந்தைகளுக்கு அப்படி ஆரம்பித்தல் கூடாது. ஏனெனில் முதலில் அவர்கள் முழு வளர்ச்சியடைய வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் விழுங்கும் திறனும் சீரண மண்டலும் நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கும். எனவே குறை மாதக் குழந்தைக்கு மாதக் கணக்கை பார்த்து திட உணவுகளை ஆரம்பிக்காதீர்கள். அவர்களின் வளர்ச்சியை பார்த்து ஆரம்பியுங்கள்.

உறக்கம்

குறை மாத குழந்தைகள் முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளை விட அதிக நேரம் தூங்குவார்கள். தலையணை இல்லாமல் நல்ல படுக்கை விரிப்பை பயன்படுத்தி உறங்க வையுங்கள். குப்புற படுத்து உறங்குவது, மென்மையான விரிப்புகள் போன்றவற்றால் தீடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இறப்பு (SIDS) கூட நேரலாம்.

கண் பார்வை

குறை மாத குழந்தைகள் மாறு கண் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் இரண்டு கண்களில் உள்ள கருவிழிகளும் பார்க்கும் போது ஒரே விதமாக இருக்காது. ஆனால் இந்த பிரச்சினை குழந்தை வளர வளர மாறுவிடும். இருப்பினும் தகுந்த குழந்தை நல கண் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. அவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை ரெட்டினோபதி ப்ரீமெச்சுருட்டி (ROP). இதில் கண்களில் உள்ள இரத்த குழாய்கள் அசாதாரண வளர்ச்சி அடைந்து காணப்படும். எனவே தகுந்த கண் மருத்துவரை நாடி அடிக்கடி இதற்கு சிகிச்சை மேற்கொள்வது முக்கியம்.

கேட்கும் திறன்

குறை மாத குழந்தைகள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை கேட்கும் திறன் குறைவாக இருப்பது. உங்கள் குழந்தை நீங்கள் கூப்பிட்டும் பதில் அளிக்காவிட்டாலும் பக்கத்தில் ஏற்படும் சத்தத்தை கவனிக்காவிட்டால் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி
குறை மாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அடிக்கடி ப்ளூ போன்றவற்றால் பாதிக்கப்படுவர். எனவே மருத்துவரை நாடி அதற்கான தடுப்பூசிகளை முன் கூட்டியே போட்டு கொள்வது நல்லது.

பயணம்

உங்கள் குறை மாத குழந்தையை காரில் கொண்டு நீங்கள் பயணம் செய்தால் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கென்று பாதுகாப்பான இருக்கையை நீங்கள் அமைக்க வேண்டும். தலை அசையாத படி துண்டையோ அல்லது போர்வையோ பக்க பலமாக பயன்படுத்தி கொள்ளலாம். பின்புற பக்கமாக பார்க்கும் படி வைத்து கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறவினரை உதவிக்கு வைத்து கொள்ளுங்கள். குழந்தையை ஒரு போதும் காரில் தனியாக விடாதீர்கள். மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசித்து கொள்வது நல்லது.

கவனத்தில் வைக்க வேண்டியவை

உங்கள் குழந்தை குறை மாத குழந்தையாக இருந்தால் அவர்களின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சரியாக கையாள வேண்டும். உங்களுக்கு குறை பிரசவம் நடந்து இருந்தால் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி நீங்களும் உங்கள் குழந்தையும் ஓய்வெடுக்க வேண்டும். வீட்டிற்கு வந்ததும் உங்கள் குழந்தையையும் வீட்டு பொறுப்புகளையும் நேரத்தையும் சரியாக கையாளுங்கள். வேண்டுமென்றால் உங்கள் துணையையோ அல்லது குடும்ப உறுபெபினர்களையோ உதவிக்கு வைத்து கொள்ளலாம்.

மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் மற்றவர்களுடமிருந்து நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அவர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். அவர்களின் உட்காருதல், தவழ்தல், நடத்தல் வளர்ச்சி மெதுவாகத் தான் இருக்கும். எனவே அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். கண்டிப்பாக கூடிய விரைவில் முழு வளர்ச்சியடைந்து எழுந்து நடந்து விடுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button