27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
20170617092
ஆரோக்கியம் குறிப்புகள்

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவுகிறது.

சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது.

இருப்பினும் சிலருக்கு உடற்பயிற்சி முன் என்ன சாப்பிட வேண்டும்? வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா என்பதை பற்றி சந்தேகம் காணப்படுவதுண்டு. தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம்?

வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படலாம்.

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி செய்வதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டு ஆப்பிள்கள் சாப்பிடலாம். இவை உடலுக்கு ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியை சிறிதளவு சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை சளியை உருவாக்கக்கூடும். மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும்.

எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு தண்ணீர் பருகலாம். தாகமாக இருப்பதாக உணர்ந்து அதிக அளவில் தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சாப்பிட வேண்டியவை?

பழங்கள் நட்ஸ் வகைகள் முழு தானியங்கள் முட்டை கோதுமை பிரெட் சாண்ட்விச் தயிர் பால்

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமல்ல, புரதங்களையும் உடல் பயன்படுத்துகிறது. அதனை ஈடு செய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை சாப்பிடுவது அவசியமானது.

உடலுக்கு தேவையான தசைகளை உருவாக்க இது தேவைப்படுகிறது. ஆதலால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டி சாப்பிடுவது ஆரோக்கியமானது.

Related posts

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதை செய்யுங்கள்!

nathan

குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள்!..ஏன் தெரியுமா?

nathan

ஏன் தெரியுமா பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன் ??

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிட்ட உடனே தேநீர் அருந்தினால் என்ன நடக்கும்..?!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த 8ல் ஒன்றை தேர்வு செய்யுங்க: உங்கள் குணம் இப்படித்தானாம்

nathan

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!

nathan

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்கள் வராமல் இருக்க முன்னோர்கள் செய்த செயல்..!

nathan

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan