29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 61ce7f84f
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பெருங்காயம் வாசனையானது மட்டுமல்ல உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு உணவு பொருளாகவும் இருக்கிறது.

பெருங்காயம் தரும் நன்மைகள்

தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும்.

குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும்.

அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.

நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும்.

குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகி விடும்.

பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.

பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும்.

Related posts

உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா…ஷாக் ஆகாதீங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கட்டுக்கோப்பான உடலைப்பெற பின்பற்ற வேண்டியவை

nathan

இதோ வீட்டில் மல்லிகை செடியை வளர்ப்பது எப்படி?

nathan

இந்த ஒரு பழத்தில் இம்புட்டு மருத்துவ குணங்களா?

nathan

தெரிஞ்சிக்கங்க…மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக் கொண்டுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

nathan

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம்!

nathan

அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்

nathan

நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

உங்க மனைவி உங்களோட சண்டை போடமா இருக்க என்ன பண்ணனும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan