கசகசாவை குறைந்த அளவில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு
கசகசாவில் மக்னிசீயம் அதிகமாக இருப்பதால் தூக்கத்தை எளிதில் வரவழைக்கும். தூக்கமின்மையை குணப்படுத்தும். மெக்னீசியம், தூக்கம் வரவழைக்கும் ஹார்மோனான மெலடோனினை அதிகரிக்கிறது, மன அழுத்தத்திற்கான ஹார்மோனான கார்டிசோலை குறைக்கிறது. கசகசாவில் உள்ள மிகவும் சிறிதளவேயான ஓபியம் ஆல்கலாய்டுகள் தூக்கம் வரவழைக்க உதவுகிறது. சூடான பாலில் ஒரு டீஸ்பூன் அளவு கசகசா பொடியை கலந்து குடித்தால் சுகமான தூக்கம் நிச்சயம்.
வாய்ப்புண்
கசகசாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு காரணிகள், வாய்ப்புண்ணுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதிகமான உடற்சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்ணை கசகசாவின் குளிர்ச்சியூட்டும் தன்மை குணப்படுத்தும். கசகசா பொடியுடன் சர்க்கரை அல்லது தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்ட் போல் செய்து வாய்ப்புண்ணுக்கு மருந்தாக சாப்பிடலாம்.
இதயம் பலமாகும்
கசகசாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதில் உள்ள லினோலிக் அமிலம் இதய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B6 ஆகியவை இதய பிரச்சினைகளை குறைக்கிறது.
செரிமானம்
கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இந்நார்ச்சத்தானது மலத்தை இளக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கசகசா விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
முக்கிய குறிப்பு
கசகசாவை உட்கொள்வதால் சில எதிர்மறையான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. கசகசா ஓப்பியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை சுத்திகரிக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும்.
தாங்க முடியாத நீண்ட கால வலிகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது கசகசாவை உபயோகிக்கும் முன் கழிவுகளை அகற்றி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளில் தான் ஓபியம் உள்ளது. கசகசாவை அரைப்பது கடினம்.
எனவே அதை வறுத்து இரண்டு மணி நேரம் நீரில் அல்லது பாலில் ஊர வைத்து எளிதில் அரைக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சே. எனவே கசகசாவை அளவாக உபயோகிப்பது நலம் பெயர்க்கும்.