29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
அசைவ வகைகள்

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக  இருக்கும்.

 

 

தேவையான பொருட்கள்:
மீன் – ½ கிலோ
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டிஸ்பூன்
சிறிய வெங்காயம் – 5
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்து, புளியை ½ மணி நேரம்  தண்ணீர் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
வரமிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு அதில் சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல செய்துக்  கொள்ள வேண்டும். சிறிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் ஊறவைத்திருந்த புளிச் சாற்றினைக் கலக்கவும்.
பின்பு வாணலில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், வெந்தயம்,  தக்காளி போட்டு தாளித்து, பச்சை மிளகாய் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்திருந்த பேஸ்ட்  மசாலாவை மற்றும் தேவையான உப்பை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை போட்டு 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில்  வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு தயார்!

Related posts

செட்டிநாடு மட்டன் பிரியாணி

nathan

புதுமையான புதினா இறால் குழம்பு செய்ய தெரிந்து கொள்வோம்…

nathan

சூப்பரான வெண்டைக்காய் பொரியல்

nathan

சுவையான கொத்து கோழி

nathan

பைனாப்பிள் ரைஸ்

nathan

காரமான மசாலா மீன் வறுவல்

nathan

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

nathan

தேங்காய்ப் பால்- ஆட்டுக்கால் குழம்பு- செய்வது எப்படி?

nathan

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

nathan