26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 61c326026ae
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தளர்ந்த மார்பகங்களை சரிசெய்ய வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

பொதுவாக தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக சிலருக்கு மார்பகங்கள் தொய்வடைந்து தளர்ந்து விடுவது சகஜம்.

பெரும்பாலான பெண்கள் மார்பகங்கள் தளர்ந்து போவதை விரும்ப மாட்டார்கள்.

தளர்ந்த மார்பகத்தை சில பயிற்சிகளின் மூலம் சரி செய்ய முடியும். அப்படிப்பட்ட பயிற்சிகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

​புஷ் அப்கள்

 

உங்கள் உள்ளங்கைகள் மற்றும் கால்விரல்களை கீழே வைத்து, கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் செல்லும் நிலை தான் புஷ் அப் என்பது. இது உங்களின் மார்பக தசை நார்களை வலுப்படுத்துவதோடு, உங்கள் தோளின் வலிமையையும் அதிகரிக்க உதவும்.

பிளாங்க்ஸ்

 

புஷ் அப் போன்ற நிலை தான் இந்த பிளாங்க்ஸ் என்பதும். புஷ் அப்பில் நீங்கள் உங்களின் உள்ளங்கையை மட்டுமே தரையில் வைத்து செயல்படுவீர்கள். பிளாங்க்ஸ் பயிற்சியில் கை முட்டி வரை தரையில் வைத்து புஷ் அப் எடுப்பது போன்றே செயல்பட வேண்டும்.

​கோப்ரா போஸ்

 

கோப்ரா போஸ் என்பது நீங்கள் உங்களின் வயிறு மற்றும் கையை தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மெதுவாக கழுத்து மற்றும் முதுகுப் பகுதியை மேல் நோக்கி நகர்த்த வேண்டும். பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

​டம்புள்ஸ் பிரஸ்

 

30-45 டிகிரி சாய்ந்த நிலையில் முதுகை கீழே வைத்து படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் கைகளில் டம்புள்சை பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்து மார்பை நோக்கி டம்புள்சை கீழே இறக்கி பின்னர், மூச்சை வெளியேற்றும் போது கைகளை மேலே தூக்கவும்.

இதனை செய்யும்போது உங்கள் கைகளின் மணிக்கட்டுகள் நேராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

​கேபிள் கிராஸ்ஓவர்

[9PAHJG ]

உங்களின் இரண்டு கைகளைக் கொண்டு எடையை இழுக்க வேண்டும். அப்படி இழுக்கும்போது நீங்கள் மூச்சை உள்ளிழுத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக அருகருகே கொண்டு வர வேண்டும்.

பின்னர் பழைய நிலைக்கு சென்று மீண்டும் அதேபோல் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் மார்பு தசைகள் அழுத்தப்படும். இதனால் மார்பு பகுதியில் உள்ள தசை நார்கள் வலுவடையும்.

Related posts

இந்த ராசிக்காரங்க எவ்வளவு சோகமா இருந்தாலும் சந்தோஷமாக இருக்குற மாதிரி போலியா நடிப்பாங்களாம்…!

nathan

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

nathan

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்தவேண்டும்..

nathan

உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?…

nathan

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பருவமழை காலத்தில் நாம் செய்யும் தலைமுடி பராமரிப்பு தவறுகள் இவை தானா???

nathan