28.6 C
Chennai
Saturday, May 18, 2024
14 1450069824 5 air pollutant
மருத்துவ குறிப்பு

நமக்கு தெரியாமல் நம் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!

தொண்டைக்கு நடுவே மற்றும் முன்பக்கம் அமைந்திருப்பது தான் தைராய்டு சுரப்பி. இந்த சுரப்பி உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு தேவையான தைராய்டு ஹார்மோன்களை சுரந்து, உடலின் மெட்டபாலிசத்தை சீராகப் பராமரிக்கும். ஆனால் தற்போது இந்த தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படுவதில்லை. இதனால் தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படுகிறது. பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள்.

ஹைப்போ தைராய்டு இருந்தால், உடல் பருமன், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை, வறட்சியான சருமம், வறட்சியான முடி, கவனக்குறைவு, அதிகப்படியான சோர்வு, ஒருவித எரிச்சல் போன்றவை ஏற்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், நாம் உட்கொண்டு வரும் உணவுகளில் உள்ள டாக்ஸின்கள் தான். சரி, இப்போது தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் அந்த டாக்ஸின்கள் என்னவென்று பார்ப்போம்.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகள், பானங்கள் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், தைராய்டு சுரப்பி தான் பாதிக்கப்படும். ஏனெனில் பிளாஸ்டிக்கில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள், உணவின் மூலம் உடலினுள் நுழைந்து, அதனால் தைராய்டு சுரப்பியை மட்டுமின்றி, புற்றுநோய் வரை தீமை விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்.

சோயா

சோயாவில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள், தைராய்டு சுரப்பியில் அடைப்பை ஏற்படுத்தி தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். மேலும் சோயா பொருட்களை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு தேவையான அயோடினை உறிஞ்சும் அளவு குறைந்துவிடும். எனவே சோயா உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகள்

தற்போது பழங்கள் மற்றும் காய்கறிகள் விளையும் போது, கெமிக்கல் கலந்த பூச்சிக்கொல்லிகள் அதிகம் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுவதால், அவற்றின் மேல் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. இந்த கெமிக்கல்கள் தைராய்டு சுரப்பியை பாதித்து, அதனால் மூளை பாதிப்படையும் வரையிலான பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவிய பின்னர் பயன்படுத்துங்கள்.

புளூரைடு தண்ணீர்

தற்போது புளூரைடு என்னும் கெமிக்கல் அதிகம் இருக்கிறது. இப்படி புளூரைடு உள்ள தண்ணீரை அதிக அளவில் பருகி வந்தால், அதனால் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்துகிறோம். நீரில் குளோரின் அதிகம் இருந்தாலும், அதுவும் தைராய்டு சுரப்பிக்கு கேடு விளைவிக்கும்.

எரிபொருளில் இருந்து பெறப்படும் பெர்குளோரேட்ஸ்

காற்று மிகவும் மாசடைவதற்கு வாகனங்களின் அளவு அதிகமாயிருப்பதும் ஓர் காரணம். வாகனங்களின் எரிப்பொருள்களில் இருந்து உற்பத்தியாகும் பெர்குளோரேட்டுகள், நாம் சுவாசிக்கும் போது உடலினுள் நுழைகிறது. இந்த கெமிக்கல் சில உணவுகள் மற்றும் தண்ணீரிலும் உள்ளது. இது தைராய்டு சுரப்பியை பாதித்து, வேறுபல ஆரோக்கிய

14 1450069824 5 air pollutant

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள்

nathan

ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி

nathan

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

nathan

கேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி

nathan

கருவில் இருப்பது என்ன குழந்தைனு வீட்டிலேயே தெரிஞ்சிக்க

nathan

இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தா?டெங்குவோட அறிகுறியாம்…!

nathan