28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 61503e3
ஆரோக்கிய உணவு

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சளாகும். மஞ்சள் ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்று அழைக்கபடுகிறது. விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. மஞ்சள் உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும்.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த மூலிகை தான் மஞ்சள். இதன் அறிவியல் பெயர், ‘கர்க்குமா லாங்கா’ ஆகும். மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் கிடைக்ககூடிய பலவகையான பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

 

மஞ்சள் செடி 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும். இது ஒரு பூண்டு வகை செடியாகும். இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து துளிர்த்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. இதனை தமிழர் சடங்குகளின் போது புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

 

பொதுவாக இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாமல், முக்கிய இந்திய சமையல்கள் நிறைவடையாது.

தோலிற்கு பாதுகாப்பு கொடுக்கும்

மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு பாதுகாப்பும் கொடுக்கும். சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பாதங்களை மென்மையாக்கும்

 

பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக மாறும்.

வீக்கங்களை குறைக்கும்

உடலின் ஏதாவது பாகத்தில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால் மறைந்துவிடும்.

கட்டிகளை உடைக்கும்

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் பழுத்து உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து மிதமான சூட்டில், அடிபட்ட இடத்தில் தடவி வந்தால், வலியும், வீக்கமும் குறையும்.

அம்மை நோய் தாக்கத்தை குறைக்கும்

அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளை அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களை சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கபடும்.

தளர்ந்த வயிறை இறுக உதவும்

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப்புண் ஆறும், சளி பிரச்சனை தீரும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவுகளில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு மீண்டும் பழைய நிலையை அடைய இது உதவுகிறது. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

 

Related posts

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

nathan

உடல் நலனை பேணும் காய்கறிகள்

nathan

அவசியம் படிக்க..கேன்சர் வராமல் இருக்க இந்த உணவுகளை உண்ணாதீர்!

nathan

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இரும்பு சத்தினை அதிகரிக்க ஏற்ற மிகச்சிறந்த பழம் பேரீச்சம்பழம்

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பானிபூரி சாப்பிடலாமா?

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan