மருத்துவ குறிப்பு

உளவியலாளர் கூறும் பகீர் உண்மை! தினமும் 3 நேரம் குழந்தைகளிடம் இதை கண்டிப்பாக செய்ங்க…

குழந்தைகளை ஒரு நாளில் மூன்று நேரத்தில் தொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொடுங்கள் குழந்தைகளிடம் மாற்றம் காணுங்கள்.

காலை எழுந்ததும் குழந்தை அருகில் சென்று தூக்கி கொஞ்சி எழுப்ப வேண்டும். அப்படி கொண்டே வரலாம் அல்லது வீட்டுக்கு வந்ததும் உட்காரவைத்து தலையை கோதி முத்தமிட்டு அவர்களிடம் பேசி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இதனால் அவர்களது பள்ளியில் என்னநடந்தது, அசிரியர்கள் என்ன சொன்னார்கள், நண்பர்களுடன் விவாதம் நடந்ததா? என அனைத்தையும் உங்களிடம் சொல்ல துவங்குவார்கள். இது குழந்தைகளை சரியான வழியில் செல்லத்தூண்டும்.

இரவு தூங்கபோகும் போது ஏதாவது ஒரு குட்டி கதையை சொல்வதோ அன்றைய நாளில் என்ன பிடித்தது என்ன பிடிக்கவில்லை என்று உரையாடுவதோ குழந்தைகளை சிந்திக் வைக்கும்.

அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகை பிடித்து கொண்டோ அல்லது அவர்களது முதுகில் கைவைத்து தடவியோ பேசுவது அவசியம்.

தொடு உணர்வும், தொடர்ந்த உரையாடலும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் எதையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவும் வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button