உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இதனால் உடலில் அதிக கொழுப்பு சேர்கின்றது. இதனை கரைக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் கரைக்க முடியும். அந்தவகையில் கொழுப்பை மொத்தமாக குறைக்க ஒரு அற்புதமான பானம் ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையானவை
காபி பவுடர்
எலுமிச்சை சாறு
செய்முறை
ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்து அது கொதித்தவுடன் ஒரு டம்பளருக்கு மாற்றி காபி பவுடர் நன்றாக கலந்து விடுடவும்.
இனிப்பாக எதுவும் சேர்த்து கொள்ள கூடாது.
பின் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். தினமும் காலையில் வெதுவெப்பான நீர் எடுத்து 20 நிமிடங்களுக்கு பிறகு எடுக்க வேண்டும்.
பிறது உடற்பயிற்சிக்கு முன் எடுத்து கொள்வது நல்லது.
நன்மைகள்
கொழுப்பை குறைப்பதுடன், ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், உடற்பயிற்சியினால் ஏற்படும் வலிகளை குறைக்கின்றது.