29.2 C
Chennai
Wednesday, Jul 30, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

 

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும்.  வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இளமையை தக்க வைக்க, மீனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மீனில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கும். ‘காட் லிவர் ஆயில்’ தோலில் எண்ணெய் சத்தை அதிகரிக்கும்.  வாரம் ஒரு முறை, குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெய் எடுத்து கை, கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, சுருக்கங்களைத் தடுக்கும்.  தயிர், சுருக்கங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படும். கழுத்து மற்றும் கைகளில் தயிரைத் தடவிக் கழுவுவதைத் தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் வராது.  வெயிலில் வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், குளிர் காலத்தில் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்தலாம்.

அதுவும் சருமத்துக்கு ஏற்ற எஸ்பிஎஃப் அளவை பார்த்து க்ரீம்கள் வாங்க வேண்டும்.  முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆயில் புல்லிங் செய்யலாம்.  வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்கூட சருமத்தில் முதுமையை நெருங்கவிடாது.    மூளையையும் மனதையும் எவ்வளவு ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறோமோ அதே அளவு நம் உடலும் தோலும் சிறப்பாக இருக்கும்.

Related posts

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika

அழகுக்கு அழகு சேர்க்கும் “முல்தானி மெட்டி”

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா

nathan

சருமமே சகலமும்!

nathan

பற்கள் உறுதி பெற உணவுகள்

nathan

டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார்

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan