ஆரோக்கிய உணவு

மணமணக்கும் மீன் பிரியாணி!வீட்டில் செய்து ருசியுங்கள்!

சுவையான மீன் பிரியாணி வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்.

அது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக் கரண்டி

செய்முறை
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும்.

மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

 

பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதாஅரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும்.

பின்னர் சிறிது நேரத்தில் இறக்கவும். குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

Related posts

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!….

sangika

சௌ சௌ வை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி தோசை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan