மதியம் என்ன சமைப்பதென்று புரியாமல் இருக்கிறீர்களா? அப்படியானால் இன்று காளான் மற்றும் பேபி கார்ன் கொண்டு செய்யப்படும் மசாலா செய்து சாப்பிடுங்கள். இதில் உள்ள காளான் மற்றும் பேபி கார்ன் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் காளானில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும், பேபி கார்னில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.
எனவே இதனை அவ்வப்போது உங்கள் டயட்டில் சேர்த்தால் நல்லது. சரி, இப்போது காளான் மற்றும் பேபி கார்ன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Spicy Mushroom And Baby Corn Masala Recipe
தேவையான பொருட்கள்:
காளான் – 2 பாக்கெட்
பேபி கார்ன் – 1 பாக்கெட்
கறிவேப்பிலை – சிறிது
ஸ்பிரிங் ஆனியன் – 1 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 8-10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி கெட்சப் – 4 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சீசுவான் சாஸ் – 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க வேண்டும்.
Spicy Mushroom And Baby Corn Masala Recipe
பின்னர் அதில் பூண்டு, கரம் மசாலா சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதோடு ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
Spicy Mushroom And Baby Corn Masala Recipe
பிறகு அதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், சீசுவான் சாஸ் ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
அடுத்து, அதில் காளான் மற்றும் பேபி கார்ன் சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
Spicy Mushroom And Baby Corn Masala Recipe
பின் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சோள மாவை கலந்து, அதனை வாணலியில் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா ரெடி!!!