27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
21 619f70ea64
ஆரோக்கியம் குறிப்புகள்

துளசியில் ஒளிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கங்க…

துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதனால் தான் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. இன்னும் பல உடல நல பிரச்சினைகளை சரி செய்கின்றது.

தற்போது துளசியை எப்படி ? என்னென்ன நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

 

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

துளசி சாறு சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்துமா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

Related posts

வெந்நீர் Vs ஜில் நீர்… எந்த குளியல் பெஸ்ட்?

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

அரிசியில் இதை இரண்டு சொட்டு கலந்து சமைத்தால் போதும்! என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இயற்கை தரும் ஆரோக்கியம்

nathan

அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!

nathan

கோடை வெயிலில் உங்க கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும்?

nathan

இந்த பழக்கம் உள்ள பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாம்…

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்!..

nathan