32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
21 61a22
சிற்றுண்டி வகைகள்

மழைக்காலத்தில் வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

மழைக்காலம் (Rainy season) வெளுத்து வாங்குவதால் அனைவரும் வீட்டிலிருந்த படி சூடான சுவையான உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்குவார்கள். ஆனால், மழைக்காலத்தில், வீட்டில் வடித்த சாதத்தை மதியம் சாப்பிட முடியாது.

மதியம் வடித்த சாதத்தை இரவு சாப்பிட முடியாது. அந்த அளவிற்கு சாதம் சில்லென ஃப்ரிட்ஜில் (fridge)வைத்தது போல் மாறிவிடும். அப்படி அந்த சாதத்தை வீணாக்காமல் எப்படி உபயோகமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுட சுட வடை எப்படி சுட வேண்டும் என்பதை பற்றி எல்லாம் இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள் (Required things)

பழைய சாதம் – 2 கப்,

அரிசி மாவு – ஒரு கப்,

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி சிறிய துண்டு – ஒன்று,

கருவேப்பிலை – ஒரு கொத்து,

கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து,

உப்பு – அரை ஸ்பூன்,

எண்ணெய் – கால் லிட்டர்.

வடை செய்ய செய்முறை விளக்கம் ( Vada Recipe description)

முதலில், எடுத்தவுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதனுடன் சிறிய துண்டு இஞ்சியை தேங்காய்துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த கலவை எல்லாம் வடை பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை அரிசி மாவை (RICE) சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்படி வடை மாவு பதத்திற்கு வந்தவுடன் அரிசி மாவு சேர்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் (oil) நன்றாக காய்ந்ததும் பின், மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி, அதன் நடுவில் மெது வடைக்கு செய்வது போல ஆள்காட்டி விரலை வைத்து ஒரு ஓட்டை போட்டுக் கொண்டு, வடை மாவை எண்ணெயில் போட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வடையாக எண்ணெயில் போட்டு சிவந்து வரும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வடை தயாராகிவிட்டது. இதை மாலை நேரத்தில் டீயுடன் (Tea) சேர்த்து கொடுத்து பாருங்கள் அதன் சுவையே தனி தான்.

Related posts

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

அரிசி வடை

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan

அச்சு முறுக்கு

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

சுக்கா பேல்

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan